ஆசிர்வாதம் தாரும் நேசிக்கும் உம் தாசருக்கு - திருநாள் கீதங்கள் 54 வது பாட்டு
Автор: Multi Instrumental (Melody)
Загружено: 2026-01-14
Просмотров: 130
ஆசீர்வாதம்
54-ம் பாட்டு
இராகம்: ஆசீர்வாதம் வேணும்
பல்லவி
ஆசீர்வாதம் தாரும் நேசிக்கும் உம்தாசருக்கு
1 பெற்றபிதா மாதாவைப்போல் குற்றங்கள் யாவையும் நீக்கி சற்றும் துன்பமின்றி காக்க
ஆசீர்
2 கேடுகெட்ட பாவிகட்காய் பாடுபட்டீர் எம்குருவே கேடுகுணம் நீங்கிடவே
ஆசீர்
3 பொய்வழிகள் நீங்கிடவும் மெய்வழிகள் நிலைத்திடவும் துய்ய வேதம் எங்கும் துலங்க
ஆசீர்
4 கேளுங்கள் கொடுப்பேனென்றும் தேடுங்கள் கண்டடை வீரென்றும் கூறின உம்வாக்கின்படியே
ஆசீர்
5 பூவின்மீது சமாதானம் புண்ணியராம் சுவாமியாலே பூரணமாய் பெற்று மகிழ
ஆசீர்
தேவ ஊழியத்தின் மேலும் தேவ ஊழியர்கள் மேலும் தேவரீர் உம்சபைகள் மேலும்
ஆசீர்
7 இன்றும் என்றும் ஒன்றுபோல இருப்பவரே உமது நாமம் இன்பமுடன் போற்றித் துதிக்க.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: