நாடகக் கலை பயணத்தில் முடிசூடா மன்னனாக வலம் வரும் ராஜேந்திரன் கலைப்பயணமும் வாழ்க்கை பாதையும்.
Автор: சித்தன் TV. sithan TV
Загружено: 2022-11-09
Просмотров: 8240
நாடகக் கலைப்பயணம்
ஓம் நமசிவாய
எல்லாம் சிவமயம்
உலகமே பூஜ்ஜியம்
நாடகக் கலைஞர் ராஜேந்திரன் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா தச்சூர் கிராமத்தில் பிறந்தார்.
இவர் பள்ளிக்கூடம் சென்றதில்லை ஆனாலும் பாடுவதில் வல்லவர். ஆடுவதிலும் பாடுவதிலும் வல்லவர் படிக்காத மேதை.
இவர் இளம் வயதில் தெருக்கூத்துக்களை கற்றுக் கொள்ளும் காலத்தில் குரு தட்சணையாக சம்பளம் கொடுப்பதற்கு கூட இவரிடம் இல்லை. அப்பொழுது இவருடைய நண்பர் அவருடைய பெயரும் ராஜேந்திரன் அவர் நீ வா நான் சம்பளம் கொடுத்துக் கொள்கிறேன் என்று கூறி தெருக்கூத்து கலையை கற்றுக் கொண்டார்.
அதன் பிறகு கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா கண்டமன்குறிச்சி சம்சுதீன் பாய் மற்றும் கடலூர் மாவட்டம் மா .புடையூர் கிராமம் பெரியசாமி நாடக ஆசிரியர் அவருடனும் இணைந்து 25 ஆண்டு காலம் நாடகக் கலையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தெருக்கூத்து கலை நேசித்து வந்துள்ளார்.
அவருடைய கலைப்பயணம் கடலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் திருச்சி மாவட்டம் திருவண்ணாமலை வரை அவருடைய கலைப் பயணம் தொடர்ந்துள்ளது.
அவர் நடிக்கும் அனைத்து நாடகத்திலும் பெண் வேடம் ஏற்று நடிப்பார். அவருடைய நடிப்பும் பாடலும் உயிரோட்டமாக இருக்கும்.
அப்படிய அவர் தாங்கி நடிக்கும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து விடுவார்.
இப்படிப்பட்ட ஒரு மாபெரும் கலைஞன் அரசு வழங்கும் விருதுகளுக்கும் உரியவராவார். அப்படிப்பட்ட பெருமையும் திறமையும் உடையவர் தச்சூர் ராஜேந்திரன்.
அவருடைய கலைப்பயணம் பல்லாண்டு தொடர வேண்டும். அந்தக் கலைத்தாய் சரஸ்வதி அன்னை அவர்களுக்கு அனைத்தையும் கொடுத்து அவருடைய கலைப்பயணம் மென்மேலும் தொடரவும் அருள் புரிய வேண்டும்.
என்றும் உங்களுடன்
சித்தன் பழனிவேல்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: