இறைவனின் திருக்குலமே வருக| Iraivanin thirukulame varuga| வருகை பாடல் |எழிலோசை|Ezhilosai
Автор: Ezhilosai Geetham
Загружено: 2020-01-27
Просмотров: 9378
Song : இறைவனின் திருக்குலமே
Album: Ezhilosai
Please find below lyrics :
இறைவனின் திருக்குலமே வருக
அரச குரு குலமே வருக(2)
கரையில்லா கருணையில் கனிவுடன் காக்கும் இணையில்லா இறைவனின் திருவடி பாடியே
மகிழ்ந்து புகழ்ந்து இணைந்து
விரைந்து பணிவோம் அவர் பதமே
1.
தாயின் கருவில் தோன்றும் முன்பே
தயவாய் நம்மை தெரிந்தார்
தனிப்பெரும் கருணையில் நம் பெயரெல்லாம்
தம் கையில் பொறித்து வைத்தார்
தாயாக நாளும் சேயாக நம்மை
கண்போல காக்கின்றார்
இந்நாளில் நாமும் ஒன்றாகக்கூடி
பண்பாடி பணிந்திடுவோம்
2.
அரணும் கோட்டையும் கேடயமானவர்
அவர் புகழ் பாடிடுவோம்
வாழ்வும் வழியும் வலிமையும் ஆனவர்
அவரடி பணிந்திடுவோம்
வற்றாத நதியாய் அருள் வாரி வழங்கும் பலிபீடம் சூழ்ந்திடுவோம்
அருளோடு நாமும் உறவோடு வாழ்வோம் உலகோர்க்கும் உரைத்திடுவோம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: