தென்னாட்டு மன்னவரு || சின்ன மருது பெரிய மருது பாண்டியர் || வரலாற்று பாடல்
Автор: PK _EDITZ
Загружено: 2022-06-24
Просмотров: 70189
True History of maruthu brother's
மருது சகோதரர்கள் வரலாற்று பாடல்
காளையார் கோவில் என்று அழைக்கப்படும் திருக்கானபேரின் ராஜ கோபுரத்தை வின்னலவு எழுப்பியது மாமன்னர் மருது சகோதரர்கள் என்பது உலகம் அறிந்த வரலாற்று உண்மை💯.
The Marudhu Pandiyars (Periya Marudhu and Chinna Marudhu) were Diarchal Kings of Sivagangai, Tamil Nadu, India, towards the end of the 18th century. They were known for fighting against the East India Company.They were finally executed by the EIC after being captured by them.
காளையார் கோவில் கோபுரம்
🍁 ஓர் ஆலய கோபுரத்தை பீரங்கியால் தாக்கித் தகர்த்து விடுவோம் என்று வெள்ளையர்கள் மிரட்டியதும், அக்கோபுரத்தைக் காக்கும் நோக்கில் சரணடைந்து, வெள்ளையர்களால் தண்டிக்கப்பட்டு, தூக்கில் தொங்கி, தங்கள் இன்னுயிரை ஈந்து, சரித்திரத்தில் இடம் பெற்ற இரு மாவீரர்களைப் பற்றி நீங்கள் அறிவீர்களா ?
🥀 அந்த மாவீரர்கள் தான் சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மருது பாண்டிய சகோதரர்கள்.அவர்கள் காக்க விரும்பியது காளையார் கோயில் கோபுரத்தை.
🎭 அக்கோபுரத்தை வானளாவ எழுப்பியதே அவர்கள்தான். அதுவும் எப்படித் தெரியுமா?
💐 காளையார் கோயிலிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மானாமதுரையிலிருந்து செங்கல் கொண்டுவர வேண்டியிருந்தது.
🌸 அங்கே தான் செங்கற்சூளைகள் இருந்தன. (இந்த ஊர் மண்பாண்டங்களுக்குப் பெயர் பெற்றது. அதிலும் ‘கடம்’ எனப்படும் மண்பாண்ட இசைக்கருவி மானா மதுரை மண்ணில் செய்யப்படுவதற்கே வரவேற்பு அதிகம்.)
🌤 மருது பாண்டியர்கள் எழுப்பும் காளையார் கோயில் கோபுரத்திற்குக் கற்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றதும், வண்டி எதுவும் வைக்காமல், இருபது கல் தொலைவுக்கும் மக்களே வரிசையாக, மனிதச் சங்கிலியாக நின்று, ஒருவர் கை மாற்றி ஒருவர் கற்களைக் கொண்டுவந்து சேர்த்து விட்டனர். மன்னர்கள் செய்யும் ஆலயப் பணி சிறப்படைவதில் மக்களுக்கு அத்தனை ஆர்வம் ! காளையார் கோயில் மிகப் பழமையானது.
🌺 அதில் முன்பே ஒரு ராஜகோபுரம் உண்டு. அது பன்னிரண்டாம் நூற்றாண்டில், சுந்தரபாண்டியனால் எழுப்பப் பெற்றது. அதை மாற்றவோ, சிதைக்கவோ கூடாது என்று கருதியே பெரிய மருது புதிய கோபுரத்தைக் கட்ட எண்ணினார். இது சோமேசர் கோயிலின் முன் 157 அடி உயரத் தில் அமைந்து, கம்பீரமாக வானைத் தொட்டாற்போல் அழகுற எழுந்து நிற்கிறது.
🌤 இக்கோபுரத்தின் உச்சியில் நின்று, தூரதரிசினி கருவி மூலம் நோக்கினால் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரம் தெரியும் என்கிறார்கள்.
🍁 (சில வருடதத்திற்கு முன்னால் மதுரையில் தமிழ்த்தாயின் சிலையை மிகப் பிரமாண்டமாக நிறுவ எண்ணிய தமிழக அரசு, இடம் தேடி, வண்டியூர் கண்மாய் அருகே நிறுவலாம் என்று தீர்மானித்த நிலையில், அப்படி நிறுவினால் அது மருது பாண்டியர் எழுப்பிய காளையார் கோயில் கோபுரத்திற்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்திற்கும் இடையே ஒரு பார்வைத் தடையாக அமைந்துவிடும் என்று மக்கள் கூறியதால், அத்திட்டத்தை மாற்றி வேறு இடம் தேடுவதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.அந்த அளவு மருது பாண்டியரின் பக்தி உணர்வை மக்கள் இன்றளவும் மதித்துப் போற்றுகிறார்கள்.)
#maruthupandiyar
#maruthupandiyargal
#veerapandiyakattabomman
#rajarajacholan
#agamudaiyar_news
#agamudaiyar
#agam
#servai
#kallar
#mukkulam
#drama
#adalpadal2020
#youtube
#kalaiyarkovil
#sivagangai
#sivagangai_seemai
#thirupattur
#thanjavur
#mukkulathor
#sethuseemai
#ramanathapuram
#ramnadu
#அகமுடையார்
HD pic link :
https://www.mediafire.com/file/cc98rj...
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: