நயினை நாயகியே | நயினாதீவு நாகபூசணி அம்மன் பாடல் |
Автор: TRM PICTURE OFFICIAL
Загружено: 2024-05-17
Просмотров: 1797
#ammansong #nainativu #nagapooshany #tamilammansong #tamilbakthisong #bakthi #jaffnasong #நயினாதீவு
நயினை நாயகியே | நயினாதீவு நாகபூசணி அம்மன் பாடல் | @poovanmatheesan | | Trm Picture | Nainativu Song
பாடலாசிரியர் - கே எஸ் சாந்தகுமார்
பாடியோர் - மதுராங்கனி மற்றும் அக்ஷயன்
இசை - பூவன் மதீசன்
பல்லவி
நயினையின் நாயகியே நாம் வணங்கும் பேரொளியே
உனையன்றி தெய்வமில்லை இந்த மண்ணிலே
நாகத்தின் மேலேறி நல்லாட்சி செய்பவளே
உனைநீங்கி போனதில்லை எந்தன் ஜீவனே! (2)
குழு
ஆர்ப்பரிக்கும் அலையோசை
உந்தன் பேரை சொல்லுதம்மா
ஆலயத்தின் மணியோசை
உள்ளப் போரை வெல்லுதம்மா
அரவத்தின் கர்வமெல்லாம்
உன்னடியில் பணியுதம்மா
அடியார்கள் குறையெல்லாம்
அடியோடு தொலையுதம்மா!
சரணம் ஒன்று
சித்திர தேரேறும் சீமாட்டி உனைக்காண
மொத்த ஊரும் சேரும் உந்தன் வாசலிலே
அத்தனை பேருக்கும் ஆதாரம் நீதானே
எங்கள் சோகம் தீரும் உந்தன் பார்வையிலே! (2)
நயினை மண்ணாளும் நாக பூசணியே
உனைக்காண ஒரு கோடி விழி வேண்டுமே
உயிரை எந்நாளும் காக்கும் காரணியே
உனைச்சேர வலி யாவும் அகன்றோடுமே!
குழு
ஆர்ப்பரிக்கும் அலையோசை
உந்தன் பேரை சொல்லுதம்மா
ஆலயத்தின் மணியோசை
உள்ளப் போரை வெல்லுதம்மா
அரவத்தின் கர்வமெல்லாம்
உன்னடியில் பணியுதம்மா
அடியார்கள் குறையெல்லாம்
அடியோடு தொலையுதம்மா!
சரணம் இரண்டு
நேத்திகள் வைத்தோரின் நெஞ்சத்தில் நீவந்து
நிதம் நீயும் தருகின்றாய் நிம்மதியே
யாத்திரை வருவோரின் யாவுமாய் நீ நின்று
வரம் யாவும் கொடுக்கின்றாய் வானதியே! (2)
நயினை மண்ணாளும் நாக பூசணியே
உனைக்காண ஒரு கோடி விழி வேண்டுமே
உயிரை எந்நாளும் காக்கும் காரணியே
உனைச்சேர வலி யாவும் அகன்றோடுமே!
குழு
ஆர்ப்பரிக்கும் அலையோசை
உந்தன் பேரை சொல்லுதம்மா
ஆலயத்தின் மணியோசை
உள்ளப் போரை வெல்லுதம்மா
அரவத்தின் கர்வமெல்லாம்
உன்னடியில் பணியுதம்மா
அடியார்கள் குறையெல்லாம்
அடியோடு தொலையுதம்மா!
வரிகள்:- கே.எஸ்.சாந்தகுமார்!
Subscribe us
/ @trmpicture1
/ @trmpicturetamil
/ @trmpictureofficial
Flow us
/ trmpicture
/ trmpicture
/ trmpicture
https://open.spotify.com/artist/4vC5C...
/ trm-picture
https://music.amazon.ca/artists/B0CHW...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: