மயிலாடுதுறை -மருத்துவமனையின் அலட்சியம்!30 லட்சம் இழப்பீடு வழங்க நாகை நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு
Автор: Shalini TV Updates
Загружено: 2025-11-27
Просмотров: 277
மயிலாடுதுறை அருண் பிரியா மருத்துவமனையில் உயிரிழந்த சிறுவன் கிஷோரின் பெற்றோருக்கு 30 லட்சம் இழப்பீடு வழங்க நாகை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு.
இனி இதுபோன்று நடக்கக்கூடாது மகனை பிரிந்து வாடும் தந்தையின் குமுறல்.
மயிலாடுதுறை மாவட்டம் மேல மங்கநல்லூர் கிராமத்தில் வசித்து வரும் ஆசிரியர் பாலசுப்ரமணியன் சசிகலா தம்பதியினரின் மகன் கிஷோருக்கு கடந்த 28.1.2024 அன்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது உடனே மயிலாடுதுறையில் உள்ள அருண் பிரியா தனியார் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்துள்ளனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு குடல் வால் அழற்சி உள்ளதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
அறுவை சிகிச்சை :
மறுநாள் காலையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீண்ட நேரம் ஆகியும் தங்களது மகன் மயக்க நிலையில் இருப்பதை கண்ட கிஷோரின் தந்தை மருத்துவமனை ஊழியரிடம் பதறிப் போய் கேட்க ஊழியர்கள் உங்கள் மகனுக்கு ஒன்றும் இல்லை சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து விடும் என்று கூறினார். ஆனால் நேரம் தாமதமாகி கொண்டே செல்ல தாய் சசிகலா மற்றும் உறவினர்கள் மருத்துவரிடம் கேட்க தொடர்ந்து அவர்கள் மழுப்பலாகவே பதில் அளித்து வந்தனர். சிறிது நேரத்திற்கு பின் சிறுவன் கிஷோர் இறந்துவிட்டதாக கூறினர்.
சாலை மறியல் :
கிஷோரின் மரணச் செய்தி கேட்டு உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்று கூடினர் சிறுவன் இறப்பிற்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததும், முறையான பயிற்சி பெற்ற செவிலியர்கள் இல்லாததும், ஆக்சிஜன், மருத்துவ உப கரண வசதிகள் போதிய அளவு இல்லாததும் காரணம் எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: