🪘💯அட்டகாசமான மழைக்கான பாடல் | வரம் கேட்டு வந்தோம் சாமி | நாட்டுப்புற ஆடல் பாடல் படைப்பு 👏
Загружено: 2025-10-03
Просмотров: 27512
வரம் கேட்டு வந்தோம் சாமி வாழவைக்க மழைவேனும்
கையேந்தி நின்னோம் சாமி காடு கழணி செழிக்கோனும்
மக்க மனசு குளிரனும்
மரம் செடியெல்லாம் சிரிக்கனும்
துக்க மனசு மாறனும்
தூறல் எங்கள நனைக்கனும்
சுத்தி முத்தி பார்த்தோம் சாமி
சூடு கொறைய தண்ணியில்ல
கத்தி கத்தி களச்சோம் சாமி
கை நனைக்க வழியுமில்ல
ஆறு ஓடையெல்லாம் வத்திபோச்சு -இப்ப
வாய்க்கா வரப்புகூட தூத்துபோச்சு
வெளஞ்சு பூமி இப்ப வெடிச்சு போச்சு
எங்க வேல செய்யும் ஏழசனம் நொடிச்சு போச்சு
வெட்டி வெட்டி போட்டோம் சாமி
காட்டுகுள்ள மரமும் இல்ல
நச்சு நச்சு பொகதான் சாமி
கருக்கல் கூட தெரியலங்க
இயற்கையை காக்கும்றோம் சாமி -இப்ப
எங்க தாகம் தீர்க்கனும் சாமி
மின்னலோட மழைவேனும் சாமி -இப்ப
எங்க கண்ணீரேல்லம் தொடைக்கலும் சாமி
---------
பாடல் & பண்: புழுதிப் புலவன். அருள்முனைவர் K.J. அன்புநாதன் க.ச.
AI படைப்பாக்கம்: Fr. ஜோசப் அரா க.ச.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: