PANAM KODUTHU PATHAVIYE{TAMIL GOSPEL}
Автор: Sreejith Abraham Ministries
Загружено: 2018-09-18
Просмотров: 31973
EVA.DR.SREEJITH ABRAHAM,MALAMARI JOY[MUSIC} SONG LYRICS-; பணம் கொடுத்து பதவியை பெற்ற மனிதா
உம் பதவியால் இவ்உலகில் வாழ முடியுமா (2)
ஜீவிதம் என்ற பெரும் வழியில் (2)
புதுவழிகளைத் தேடி ஓடும் மனிதர்களை
நினைத்து கொள் உலகசுகம் வெறுமைதானே
மாயை தானே... சர்வ மாயை தானே
பணம் கொடுத்து
1
பணம் கொடுத்து ஆகாரம் வாங்கலாம்
அந்த ஆகாரத்தால் ஆத்ம மன்னா கிடைக்குமா
பணம் கொடுத்து மாளிகையும் வாங்கலாம்
அந்த மாளிகையில் நிம்மதி கொஞ்சம் கிடைக்குமா
ஆத்ம மன்னா வேண்டுமா
நித்திய வீடு வேண்டுமா (2)
இரட்சகரின் அருகில் வா மகனே
என்இயேசுவின் அருகில் வா மகளே
பணம் கொடுத்து
2
பணம் கொடுத்து பட்டபடிப்பு வாங்கலாம்
அந்த படிப்பிலே ஆத்மஞானம் கிடைக்குமா
பணம் கொடுத்து மருத்துவரைப் பார்க்கலாம்
அந்த மருத்துவரால் நித்தியசுகம் கிடைக்குமா
ஆத்ம ஞானம் வேண்டுமா
நித்திய சுகம் வேண்டுமா (2)
இரட்சகரின் அருகில் வா மகனே
என்இயேசுவின் அருகில் வா மகளே
பணம் கொடுத்து
3
பணம் கொடுத்து மனித அன்பை வாங்கலாம்
அந்த மனிதஅன்பில் உண்மை கொஞ்சம் கிடைக்குமா
பணம் கொடுத்து விக்ரகங்கள் வாங்கலாம்
அந்த விக்ரகத்தால் தேவ வல்லமை கிடைக்குமா
தேவ அன்பு வேண்டுமா
தேவ வல்லமை வேண்டுமா (2)
இரட்சகரின் அருகில் வா மகனே
என்இயேசுவின் அருகில் வா மகளே
பணம் கொடுத்து
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: