ராகுல் என்ன குழந்தையா? கிண்டலடித்த பாஜ தலைவர் Putin dinner|tharoor|Kerala BJP|
Автор: Dinamalar
Загружено: 2025-12-06
Просмотров: 24669
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2 நாள் அரசு பயணமாக நேற்று முன்தினம் டில்லி வந்தார்.
பிரதமர் மோடியே விமான நிலையம் சென்று வரவேற்று அவருடைய இல்லம் அழைத்துச் சென்று விருந்தளித்தார்.
நேற்று காலை புடினுக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறைப்படி
சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் புடின் காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு பிரதமர் மோடியுடன் இரு நாட்டு உறவுகள் குறித்து அவர் பேச்சு நடத்தினார்.
இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
மாலையில் ஜனாதிபதி மாளிகையில்
ரஷ்ய அதிபருக்கு விருந்து அளிக்கப்பட்டது.
பிரதமர், மத்திய அமைச்சர்கள், அரசியல், வணிகம் மற்றும் கலாசார துறைகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் விருந்தில் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் எம்.பி. சசிதரூருக்கும் அழைப்பு தரப்பட்டது. அவர் அந்த அழைப்பை ஏற்க கூடாதென காங்கிரஸ் கட்சி நிர்வாகி பவன் கெராKhera கூறினார். அதையும் மீறி
சசி தரூர் விருந்தில் கலந்துகொண்டார்.
வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வரும்போது எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்திப்பார்கள். ஆனால் புடின் எதிர்க்கட்சி தலைவர் ராகுலை சந்திக்கவில்லை.
இது குறித்து ராகுல் அதிருப்தியை வெளியிட்டிருந்தார். எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கும் பாரம்பரியத்தை மோடி அரசு மீறிவிட்டது என்று ராகுல் கூறியிருந்தார்.
விருந்துக்கும் அவரை ஜனாதிபதி அழைக்கவில்லை.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் அழைப்பு தரப்படவில்லை.
இதற்காக அரசை ராகுல் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் விமர்சித்த நிலையில், கேரள பாரதிய ஜனதா தலைவர் ராஜிவ் சந்திரசேகர் அவர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது ராகுலின், அறிவான வார்த்தைகளை
கேட்க வேண்டாம் என்பதுதான்.
ராகுல் திரும்ப திரும்ப தன்னைத் தானே சங்கடப்படுத்திக்கொள்கிறார். கேரளாவில் காங்கிரஸ் கட்சியும் ராகுலை போலவே நடந்துகொள்கிறது. அவர்கள் தேசிய நலனைக் கருத்தில்கொண்டு சிந்திப்பது இல்லை. அது அவர்களுக்கு முக்கியமில்லை என்பதால் இவ்வாறு நடந்துகொள்கின்றனர்.
அவர்கள் எதை சதி என கற்பனை செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. எனக்கு தெரிந்தவரை, சசிதரூர் வெளியுறவு துறை நிலை குழு தலைவராக இருக்கிறார். (Standing Committee on External Affairs Chairman)
அதனால் அவர் அழைக்கப்பட்டார்.
ராகுல் அழைக்கபடவில்லை என்றால் எதற்காக அவர் அழுது புலம்ப வேண்டும். எனக்கு புரியவில்லை.
அவர் என்ன குழந்தையா? அவருடைய முதிர்ச்சி இன்மையின் உச்சத்தைத்தான் இது வெளிக்காட்டுகிறது என நினைக்கிறேன்.
#PutinDinner #Tharoor #KeralaBJP #IndiaPolitics #PoliticalDinner #GlobalDiplomacy #KeralaNews #BJPIndia #Putin #PoliticalDiscussion #LeaderDialogue #DigitallyEngaged #VirtualConversations #TharoorSpeaks #SustainablePolitics #ElectionInsights #BreakingNews #PoliticalAnalysis #IndiaNews #CulturalDiplomacy# #PutinDinner #Tharoor #KeralaBJP #IndiaPolitics #PoliticalDinner #GlobalDiplomacy #KeralaNews #BJPIndia #Putin #PoliticalDiscussion #LeaderDialogue #DigitallyEngaged #VirtualConversations #TharoorSpeaks
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: