Paal vadiyum Mukham பால் வடியும் முகம் - ஊத்துக்காடு வேங்கடகவி - நாட்டைக்குறிஞ்சி ராகம் ஆதி தாளம்
Автор: चैत्ररथं
Загружено: 2025-08-31
Просмотров: 294
#Paalvadiyum #oothukkadu
இது கண்ணனின் முக அழகை மையமாகக் கொண்டு இயற்றப் பெற்ற ஒரு பக்தி பூர்வமான தமிழ் பாடல். கவின் மூலம் கண்ணன் முகத்தை நினைத்தவுடன் பரவசமடைந்து அந்த அழகை வார்த்தைகளால் சொல்லவொண்ணா வண்ணம் இறை உணர்வில் மூழ்குகிறது. கண்ணனின் நீல நிறம் சிரிப்பு குழலிசையை மிகுதியாக வர்ணிக்கப் படுகின்றன. காளிங்கன் மீது நடனமாடும் பாதங்கள், நகர விழிகள் நம்மை பக்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்கின்றன.
🎶 பால்வடியும் முகம்
பல்லவி
பால்வடியும் முகம் நினைந்து நினைந்தென்
உள்ளம் பரவச மிக வாகுதே (கண்ணா)
அனுபல்லவி
நீலக்கடல் போலும் நிறத்தழகா – கண்ணா
எந்தன் நெஞ்சம் குடிகொண்டு அன்று முதல் இன்றும்
எந்த பொருள் கண்டும் சிந்தனை செல்லாதொழிய
சரணம்
வான முகட்டில் சற்று மனம் வந்து நோக்கினும்
மோன முகம் வந்து தோனுதே
தெளிவான தண்ணீர் தடத்தில் சிந்தனை மாறினும்
சிரித்த முகம் வந்து காணுதே
கானக் குயில் குரலில் கருத்தமைந்திடினும்
உன் கான குழலோசை மயக்குதே
கருத்த குழலொடு நிறுத்த மயிலிற
கிறுக்கி அமைத்த திறத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும்
நீல நதியோடும் வனத்திலே
குழல் முதல் எழிலிசை குழைய வரும் இசையில்
குழலொடு மிளிர் இளங்கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகள்
இரு நளினமான சலனத்திலே
காளிங்கன் சிரத்திலே கதித்த பதத்திலே
என் மனத்தை இருத்திக் கனவு நினைவினோடு
பிறவி பிறவி தோறும் கனிந்துருக
வரம் தருக பரம் கருணை (பால்வடியும்)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: