நாகூர் தர்ஹா இசை நிகழ்ச்சி | திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து ..|| முகவை முரசு S.A.சீனி முகம்மது
Автор: Hajith Ibrahim
Загружено: 2025-01-03
Просмотров: 2293
திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து
தீன் கூறி நிற்பர் கோடி
சிம்மா சனாதிபர்க ணதரேந்தியேவந்து
ஜெய ஜெயா வென்பர் கோடி
________________________________________________________________________
குணங்குடி மஸ்தான் ஸாஹிபு (தொகையறா) மற்றும் கவிஞர் மதிதாசன் (பாடல் வரிகள்) எழுதிய பாடல்.
இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய "திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து... தீன் கூறி நிற்பர் கோடி" என்ற பாடல் முகவை முரசு S.A.சீனி முகம்மது குரலில்.
___________________________________________________________________________
தொகையறா - குணங்குடி மஸ்தான் ஸாஹிபு.
திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து
தீன் கூறி நிற்பர் கோடி
சிம்மா சனாதிபர்க ணதரேந்தியேவந்து
ஜெய ஜெயா வென்பர் கோடி
ஹக்கனருள் பெற்ற பெரியோர்கள் வலீமார்கள்
அணியணியாய் நிற்பர் கோடி
அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞ்ஞானிகள்
அணைந்தருகில் நிற்பர் கோடி
மக்கநகராளும் முஹம்மதிறஸூல் தந்த
மன்னரே என்பர் கோடி
வசனித்து நிற்கவே கொலுவீற்றிருக்குமுன்
மகிமை சொல வாயுமுண்டோ
தக்க பெரியோனருள் தங்கியே நிற்கின்ற
தவராஜ செம்மேருவே
தயவு வைத்தெனையாள் சற்குணங்குடி கொண்ட
ஷாஹுல் ஹமீதரசரே
பாடல் வரிகள் - கவிஞர் மதிதாசன்
உம்மை ஒரு போதும் நான் மறவேன் மீரா சாஹே மீரா
எம்மான் நபிநாதர் வாஞ்சை மிகும் பேரா நாகூர் மீரா
1
துன்பமே எழும் போது உம் புகழ் பாடி
நிம்மதி அடைவேனே தினம் தினம் நாடி
அன்புடன் ஆளுகின்ற அண்ணலே பூபா
அடியார்கள் கொண்டாடும் இஸ்லாத்தின் தீபா
உம்மை ஒரு போதும் நான் மறவேன் மீரா சாஹே மீரா
2
மாணிக்கப்பூர் தனில் தோன்றிய சீலா
மாதவராம் ஹசன் குத்தூஸின் பாலா
ஆணவம் இல்லாத அருங்குண மேதா
ஆழிய நீதியின் ஆற்றல் செங்கோலா
ஆழிய நீதியின் ஆற்றல் செங்கோலா
உம்மை ஒரு போதும் நான் மறவேன் மீரா சாஹே மீரா
3
கருணையின் வடிவாக விளங்கிடும் கோனே
கஞ்சசவாய் எனும் காதிர் மீரானே
தருணம் என் முகம் பார்த்திட வேண்டும்
தாமதம் ஏன் இன்னும் கூறிட வேண்டும்
தாமதம் ஏன் இன்னும் கூறிட வேண்டும்
உம்மை ஒரு போதும் நான் மறவேன் மீரா சாஹே மீரா
எம்மான் நபிநாதர் வாஞ்சை மிகும் பேரா நாகூர் மீரா
உம்மை ஒரு போதும் நான் மறவேன் மீரா சாஹே மீரா
எம்மான் நபிநாதர் வாஞ்சை மிகும் பேரா நாகூர் மீரா
நாகூர் மீரா... காதிர் மீரா... சாஹே மீரா...
***********************************************************************************************
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: