காரைதீவு சமுதாயக் கல்லூரியின் பயிலுனர்களுக்கான இறுதி மதிப்பீடு | VCC | CareerFit & IT | RKM | VCOT
Автор: Maatram News
Загружено: 2026-01-05
Просмотров: 10
தேவைப்பாடுடைய பிரதேசங்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழான எல்லைப் பிரதேசங்களை மையப்படுத்தியதாக சமுதாயக் கல்லூரிகளை உருவாக்கி அதனூடாக இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் வண்ணம் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது சமூகத்தின் வலுவூட்டலுக்கான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அதனடிப்படையில், மனித நேய நம்பிக்கை நிதியத்தினரின் அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட காரைதீவு பிரதேசத்தில் இராமகிருஸ்ண மிஷன் அன்னை சாரதா மேம்பாட்டு பயிற்சி நிலையத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற VCOT Computer Learning Unit இன் Office management & IT முதலாவது தொகுதி பயிலுனர்களுக்கான இறுதி மதிப்பீடு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினரால் நடாத்தப்பட்டது.
15 பயிலுனர்கள் தோற்றிய இம் மதிப்பீட்டு பரீட்சையில் அவர்களுக்கான Word, Excel, PowerPoint உள்ளடங்கலாக Office package அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டதோடு பயிலுனர்களினால் அவர்கள் கற்றுக்கொண்ட விடயங்களின் அடிப்படையிலான நிகழ்த்துகை இடம்பெற்றது. அவ்வாறே, இரண்டாவது தொகுதிக்கான புதிய பயிலுனர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் இவ்வாறான செயற்பாடுகளைத் தேவைப்பாடுடைய பிரதேசங்களுக்குச் சென்று வழங்குவதன் மூலம் இளைஞர்கள், யுவதிகளை அடையாளப்படுத்துவதோடு மட்டுமன்றி அவர்களின் எதிர்காலத்திற்கான சிறந்த வழிகாட்டலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.
இச்செயற்பாட்டிற்காக எம்முடன் இணைந்து பயணிக்கும் மனித நேய நிதியத்தினருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: