Jerusalem ஜெருசலேமில் இயேசுவின் இறப்பு-அடக்கம்-உயிர்ப்பு- Jesus Crucifixion-Resurrection-Tamil
Автор: Travel around the World
Загружено: 2021-04-03
Просмотров: 492055
Jerusalem ஜெருசலேமில் இயேசுவின் இறப்பு-அடக்கம்-உயிர்ப்பு- Jesus Crucifixion-Resurrection-Tamil
Other Videos - இது போன்ற மற்ற வீடியோக்களுக்கு -
• புனிதப்பயணம் - இஸ்ரேல் - ஜெருசலேம்- Punith...
Subscriptions: / @travelaroundtheworld4220
Location: Holy Sepulcher and Edicule in Jerusalem-Israel, Emmaus in Jerusalem-Israel
நற்செய்தியாளர்கள் விவரிக்கும் இயேசுவின் சிலுவைச் சாவு
மாற்குவின் கருத்துப்படி, இயேசுவின் போதனையும் செயல்பாடும் மக்களிடையே ஐயத்தைக் கிளப்பியது. இயேசுவின் சொற்களைக் கேட்டவர்கள், அவர் புரிந்த அரும் செயல்களைக் கண்களால் கண்டவர்கள் அவரை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. எனவே அவருக்கு எதிராக எழுந்தனர். இதுதான் இயேசு சிலுவையில் அறையப்பட வழிவகுக்கலாயிற்று. கடவுளின் மகனாகவும், ஊழியனாகவும் வந்த இயேசு சிலுவைச் சாவின் வழியாகத் தம் பணியை நிறைவேற்றினார்; பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு வந்தார் (மாற்கு 10:45).
மத்தேயுவின் கூற்றுப்படி, இயேசுவின் சிலுவைச் சாவு மறைவாக்கு நிறைவேறும்படி நிகழ்ந்தது - அதாவது, புதியதொரு மக்களினத்தை உருவாக்குவதற்காகக் கடவுள் வகுத்த திட்டத்துக்கு ஏற்ப இயேசுவின் சிலுவைச் சாவு நிகழ்ந்தது.
லூக்காவின் கருத்துப்படி, இயேசு தாம் உயிர்வாழ்ந்த காலத்தில் எதைப் போதித்தாரோ, அதையே சாவின்போதும் கடைப்பிடித்தார். இவ்வாறு, சிலுவையில் தொங்கிய இயேசு தம் பகைவர்களை மன்னித்தார் (காண் லூக்கா 23:34). சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டோர் மட்டில் பரிவுகாட்டினார் (லூக்கா 23:43). கடவுள்மேல் நம்பிக்கை வைத்தார் (லூக்கா 23:46). இவ்வாறு மனிதர் அனைவருக்கும் இயேசு ஒரு நல்ல முன்மாதிரியாக அமைந்தார்.
யோவான் நற்செய்தியில், இயேசுவின் மரணம் ஒரு தோல்வியாக அல்லாமல் ஒரு வெற்றி நிகழ்வாகக் காட்டப்படுகிறது. இயேசு உயர்த்தப்பட்டார். முதலில் சிலுவையில் உயர்த்தப்பட்டார்; சாவுக்குப் பின், உயிர்த்தெழுந்ததால், விண்ணேற்றம் அடைந்ததால், மீண்டும் உயர்த்தப்பட்டார்[3].
இயேசுவின் உயிர்த்தெழுதல் (Resurrection of Jesus)
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தீனாவில் வாழ்ந்து, இறையாட்சி பற்றி மக்களுக்குப் போதித்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு என்பவர் கல்லறையினின்று மீண்டும் மாட்சிமையான உடலோடு மூன்றாம் நாளில் உயிர்பெற்று எழுந்தார் என்னும் கிறித்தவ நம்பிக்கை ஆகும். இதை இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, போதனை, சாவு ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற நற்செய்தி நூல்கள் பதிவு செய்துள்ளன[1].
இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி அவர் விண்ணேற்றமடைந்த நிகழ்ச்சியிலிருந்து (Ascension of Jesus) வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. இயேசு கிறிஸ்து சாவின் மீது வெற்றிகொண்டு, உயிர்பெற்றெழுந்தது உண்மையாகவே நடந்த வரலாற்று நிகழ்ச்சி என கிறித்தவர்கள் நம்புகின்றனர்.[2] இது அவர்கள்தம் நம்பிக்கையின் (விசுவாசத்தின்) மையமும் ஆகும்.
The crucifixion of Jesus occurred in 1st-century Judea, most likely in either AD 30 or AD 33. Jesus' crucifixion is described in the four canonical gospels, referred to in the New Testament epistles, attested to by other ancient sources, and is established as a historical event confirmed by non-Christian sources
The resurrection of Jesus, or anastasis, is the Christian belief that God raised Jesus on the third day[note 1] after his crucifixion,[1] according to the New Testament writings as firstborn from the dead ushering in the Kingdom of God,[2][web 1] and starting his exalted life as Christ and Lord.[3][4][web 1] According to these writings, after his resurrection he appeared to his disciples for forty days, whereafter he ascended to Heaven. In Christian theology, the death and resurrection of Jesus are the most important events, a foundation of the Christian faith,[5] as commemorated by Easter
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: