மழலை வழி குறள் மொழி - திருக்குறள் குடிலில் பேச்சரங்கம்
Автор: உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம்
Загружено: 2025-11-27
Просмотров: 12
மழலை வழி குறள் மொழி - இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கத்தின் 149வது இணைய வழி நிகழ்வு. செஞ்சி தாலுக்கா, சிறுகடம்பூர், வெள்ளகுளத்தில் அமைந்துள்ள “ஏபில் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி (பழங்குடி, இருளர் சமூக மக்களுக்கான இலவசப் பள்ளி) மாணவச்செல்வங்கள் பங்கேற்ற திருக்குறள் குடில் வரிசையில் இணையவழிப் பேச்சரங்கம் – ”மழலை வழி குறள் மொழி” என்ற தலைப்பில் 10 11 25 அன்று இனிதே நடந்தேறியது. முன்மழைலயர் வகுப்பு, கீழ் மழலையர் வகுப்பு, மேல் மழலையர் வகுப்பு, முதலாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவக் கண்மணிகள் தங்கள் மழலை குரலில் திருக்குறளையும், அதன் பொருளையும் தெள்ளத் தெளிவாக பேசி உள்ளத்தை கொள்ளை கொண்டனர். தமிழின் பெருமையான ஐயன் திருவள்ளுவரின் திருக்குறள் மழலையர் மனதிலும் நிலைகொண்டிருப்பதை காணும்போது உள்ளம் களிகூறியது. அதனை நீங்களும் கண்டு களிக்க வேண்டுமென எமது உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்க வலையொளிப் பக்கத்தில் இப்பேச்சரங்கின் காணொளியினைப் பதிவிட்டுள்ளோம்.
இனிய தமிழ் உறவுகள் இந்த காணொளியினை கண்டு, தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கத்தின் வலையொளி பக்கத்திற்கு (youtube channel) உறுப்பினராகவும் (subscribe) பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி வணக்கம். உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: