மாதா பிரார்த்தனை | பாடும் போது கேட்டவர்கள் கண்ணீர் விட்ட பாடல் | 13.01.2024
Автор: Mathinan Hits
Загружено: 2024-01-19
Просмотров: 616958
13. 01.2024 அன்று, தூத்துக்குடி மறைமாவட்டம் மலையன்குளம் மாதா திருத்தலத்தில் பாடப்பட்ட மாதா பிரார்த்தனை இது.
இந்தப் பாடலை பாடும் பொழுது ஆலயத்தில் இருந்த அனேகர் கண்ணீர் விட்டு அழுததை நானே பார்த்தேன், பாடிய பாடகர் சகோதரன் வல்லவனோடு பாடகர் குழுவில் இருந்த நான் உட்பட.
Keybiard: திரு.பிரபாகர், தூத்துக்குடி.
அருமையான மன்றாட்டுப் பாடல். பிறருக்கும் பகிருங்கள். மாதாவின் புகழை பரப்புங்கள்.
மரியே வாழ்க.
ஜே.மதினன், பெரியதாழை
தூத்துக்குடி மாவட்டம்
ஜெபம்:
இப்புண்ணிய திருத்தலத்தில்
மலை மீது வீற்றிருந்து
அருள் பாலிக்கும
வியத்தகு வியாகுல மாதாவே
பரலோக பூலோக அரசியே
கஸ்தி படுபவர்களுக்கு ஆறுதலே
பாவிகளின் தஞ்சமே
அன்னமிட்ட அற்புத அன்னையே
உமது இன்பமான சன்னிதானம்
தேடி வந்தோம்
உமது திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து
உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்
தாயே உலகில் எங்கள்
ஆதரவும் நீரல்லவோ
எங்கள் தஞ்சமும் நீரல்லவோ
எங்கள் சந்தோசமும் நம்பிக்கையும்
பாக்கியமும் நீரல்லவோ
நீர் எங்களுடைய தாயார்
என்பதை எங்களுக்கு காண்பியும்
பிள்ளைகள் செய்த குற்றங்களை
மாதா பாராட்டுவாளோ
உம்மை தேடி வந்த
நிர்பாக்கியருக்கு உதவியாயிரும்
அழுகிறவர்களை அரவணையும்
அல்லல் படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும்
நீர்இரங்காவிட்டால் எங்களுக்கு
வேறு யார் இறங்குவார்
நீர் ஆதரிக்காவிட்டால் எங்களை
வேறு யார் ஆதரிப்பார்
நீர் நினையாவிட்டால் எங்களை
வேறு யார் நினைப்பார்
நீர் உதவாவிட்டால் எங்களுக்கு
வேறு யார் உதவுவார்
தஞ்சம் என்று ஓடிவரும் அடியோர்கள் பேரில் தயவாய்ரும்.
தாயே தயைக்கடலே
தவிப்பவர்களுக்கு தடாகமே
தனித்தவர்களுக்கு தஞ்சமே
உமது இன்பமான சந்நிதானம்
தேடி வந்தோம்
ஆறு காடுகளைக் கடந்து
ஓடி வந்தோம்
துன்பம் பிணி வறுமை முதலிய
கேடுகளினாலே வாடி நொந்தோம்
எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ
எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ எங்கள் வேண்டுதல்கள்
பயனற்றதாய் போகுமோ
எங்கள் அழுகை கண்ணீர்
உம்முடைய இருதயத்தை
உருக்காது போகுமோ
அப்படி ஆகுமோ அம்மா
அருமையான அம்மா
மலையங்குலம் மாதர்சியே அம்மா
விரும்பும் வரம் தரும்
வியத்தகு தாயே அம்மா
அரிசி அள்ளித் தந்து
அற்புதம் செய்தவளே அம்மா
கொடி மரத்தில் காட்சி தந்து
எமமைக் காப்பவளே அம்மா
மாமருந்து தண்ணீரால் எம்
மனக்குறை தீர்ப்பவளே அம்மா
அடியோர் எங்கள் குடும்பங்களை
உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்
எங்களை கையேற்றுக்கொண்டு
ஆசீர்வதித்தருளும்
அன்புத் தாயே ஆமென்
#மாதாபிரார்த்தனை
#மலையன்குளம்மாதா
#malauankulamchurch
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: