அமெரிக்க செயற்கைகோளை சுமந்து சென்றது இந்திய ராக்கெட் | LVM3-M6 Mission | ISRO Success |
Автор: Dinamalar
Загружено: 2025-12-23
Просмотров: 3142
#Partnership இஸ்ரோவின் பாகுபலி என்று அழைக்கப்படும் LVM3 ராக்கெட், இதுவரை இந்தியா இதுவரை ஏவியதிலேயே அதிக எடையுள்ள செயற்கைகோளை சுமந்து சென்று சாதனை படைத்துள்ளது.
முன்னதாக 5800 கிலோ எடையைச் சுமந்ததே சாதனையாக இருந்த நிலையில், இப்போது 6500 கிலோ எடையைச் சுமந்து சென்றது இந்த ராக்கெட்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட பாகுபலி ராக்கெட் வெற்றிகரமாக அதன் இலக்குகளை அடைந்தது.
அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் (AST SpaceMobile) நிறுவனத்திற்குச் சொந்தமான புளூபேர்ட் (BlueBird) செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
அதிக ஆற்றல் கொண்ட கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனம் அனுப்பிய புளூபேர்ட் பிளாக் செயற்கைக்கோள்கள், பூமியில் டவர்கள் இல்லாத இடங்களிலும் நேரடியாக மொபைல் போன்களுக்கு பிராட்பேண்ட் இணைய வசதியை வழங்கும் திறன் கொண்டவை.
இதற்காக சுமார் 450 சதுர அடி பரப்பளவு கொண்ட உலகின் மிகப்பெரிய ஆன்டெனாக்கள் இந்த செயற்கைக்கோள்களில் பொருத்தப்பட்டுள்ளன.
விண்வெளியில் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட செயற்கைக்கோள்களைக் கையாளுவதில் இந்தியாவின் திறன் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியைக் குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில்,
இது LVM3 ராக்கெட்டின் 7-வது தொடர்ச்சியான வெற்றிகரமான பயணமாகும்.
LVM3 ராக்கெட்டின் செயல்திறன் மீண்டும் ஒருமுறை உலகத் தரத்தில் இருப்பதை நிரூபித்துள்ளது.
இது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கும் ஒரு பெரும் ஊக்கமாகும் என தெரிவித்தார்.
#ISRO #LVM3M6 #SpaceMission #BlueBirdBlock2 #Sriharikota #SpaceXIndia #SatelliteLaunch #NewSpaceIndia #NSIL #5GFromSpace #IndianScience #SpaceTechnology #GlobalLaunch #SatelliteBroadband #IndiaInSpace# #ISRO #LVM3M6 #SpaceMission #BlueBirdBlock2 #Sriharikota #SpaceXIndia #SatelliteLaunch #NewSpaceIndia #NSIL #5GFromSpace #IndianScience #SpaceTechnology #GlobalLaunch #SatelliteBroadband #IndiaInSpace
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: