இறையோனே கருணை காட்டு | ரமலான் சிறப்பு பாடல் |
Автор: Zirani Devotional
Загружено: 2024-04-06
Просмотров: 9879
islamicsong #nagorehanifasong #rahema #femaleversion #islam #womeninislam #indianmuslim #muslimwomens #penkulandhaigal #women #ramadan #ramadanmubarak #allah
We dedicate this song to all Islamic people.
Subscribe our channel for more updates..
Music composed by : A.Rahema begum
Lyrics by : Dr.M.A.Kader (singapore)
Programming : Tajmeel sherif
Singer : A.Rahema begum
Chorus : Wahidha sherif
DOP - Ramakrishna GK
Editing - Thameemul Ansari
Produced by : zirani
இசை நிகழ்ச்சிகளுக்கு தொடர்பு கொள்ளவும்:
Zirani Devotional
Mobile : 8124896772
Like Us - / ziranimusic
Follow us
https://www.instagram.com/rahemabegum...
பாடலாசிரியர்: DR. M. A. காதர், சிங்கப்பூர்
பல்லவி
இறையோனே கருணை காட்டு
ஈமானை மனதில் கூட்டு
யா அல்லாஹ் யா அல்லாஹ் யா அல்லாஹ்
நிலையான சொந்தம் நீயே
நீங்காத பந்தம் நீயே
உனக்கிணையோ ஏதுமில்லை
உன் துணையால் தீரும் தொல்லை
தீராத தாகம் தீர்க்கும் ஏகன் யா அல்லாஹ்
(இறையோனே கருணைக் காட்டு)
சரணம் 1
நாள் முழுதும் தொழுதாலும்
நன்றி கூற முடியாதே
நாயனவன் நாடாமல்
நாட்பொழுதும் விடியாதே
அருளாளன் நீயே – நிஜ
அன்பாளன் நீயே
விடை யாவும் நீயே – பெரும்
கொடையாளன் நீயே
உன் வாசல் தேடி வந்தேன்
உன் நேசம் நாடி நின்றேன்
என் சுவாசம் பாசமெல்லாம்
மண்மீது உன்னில் கண்டேன்
வல்லோனே உள்ளம் எல்லாம் நீ வேண்டும்
(இறையோனே கருணைக் காட்டு)
சரணம் 2
கல்புக்குள்ளே கலிமாவை
காலமெல்லாம் காப்பவனே
நல்வழியில் நடப்போரை
நன்மையுடன் சேர்ப்பவனே
உலகாளும் நீயே – மிக
உயர்வாளன் நீயே
அணுவெல்லாம் நீயே – அனு
தினமெல்லாம் நீயே
கையேந்தி கேட்டு வந்தேன்
கண்ணீரில் நான் மிதந்தேன்
அல்லாஹ் உன் அருள் மழையால்
ஆனந்தம் நான் அடைந்தேன்
எந்நாளும் இன்பம் காண நீ வேண்டும்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: