30 விடுகதைகள் 10 விநாடிகள் | Tamil Riddles (PART-1) | 30 விடுகதை தொகுப்பு | Kanaa kids
Автор: kanaa kids
Загружено: 2022-01-12
Просмотров: 893524
#VidukathaiInTamilWithAnswerAndPictures
#விடுகதைகள்
#30விடுகதைகள்10விநாடிகள்
#Tamil Riddles
30 Riddles 10 seconds....in TAMIL...
Guess the answer...Answers with pictures.
1.தலை இல்லாதவன் தலையை சுமப்பவன் அவன் யார் ?
2. தொப்பி போட்ட காவல் காரன் உரசிப்போட்டால் சாம்பல் ஆவான்.
3. அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும் அது என்ன?4. தலையை சீவினால் தாளிலே மெய்வான்...அவன் யார் ?5. ஐந்து வீட்டிற்க்கு ஒரே முற்றம் அது என்ன?
6. வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல் ...அது என்ன?
7. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி....பாதி நாள் குறைவாள் ...பாதி நாள் வளர்வாள்.
8. விழுந்தால் படுக்காது எழுந்தால் நிற்காது, அது என்ன?
9. ஆயிரம் அறைகள் கொண்ட பிரமாண்டமான மிட்டாய் கடை....அது என்ன?
10. கூட்டுக்குள்ளே குடியிருக்கும் குருவியும் அல்ல....பாய்ந்து செல்லும் புலியும் அல்ல....எதிரியை கொல்லும், வீரனும் அல்ல....அது என்ன?
11. போட்டு போல இல்லை இருக்கும் குச்சி போல காய் காய்க்கும்...அது என்ன?
12. அள்ளவும் முடியாது கிள்ளவும் முடியாது..அது என்ன?
13. ஒளியில் கூடவே இருப்பான், இருளில் மறைந்து கொள்வான். அவன் யார்?
14. உள்ளேயிருந்தால் ஓடித்திரிவான், வெளியே வந்தால் விரைவில் மடிவான், அவன் யார்?
15. எண்ணும் முள்ளும் இல்லாத கடிகாரம்...எவராலும் பார்க்க இயலாத கடிகாரம், அது என்ன?
16. வீட்டிற்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை, அவன் யார்?
17. சட்டையை கழற்றினால் சத்துணவு, அது என்ன?
18. காலையில் வந்த விருந்தாளி, மாலையில் காணவில்லை, அவர் யார்?
19. சிறு தூசி விழுந்து குளம் கலங்குதே, அது என்ன?
20. யாரும் செய்யாத கதவு, தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
21. உங்களுக்கு சொந்தமான ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
22. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ என்ன பூ...
23. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காம போயிட்டாரு...அவர் யார்?
24. எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது.
எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
25. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அவன் யார்?
26. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன?
27. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
28. அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள். அவள் யார் ?
29. வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
30. பச்சை குடுவைக்குள் வெள்ளை முத்துக்கள். அது என்ன?
Subscribe kanaakids
http://www.youtube.com/c/kanaakids?su...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: