செயல்விளைவு தத்துவம் | Vethathiri Maharishi | Seyal Vilaivu Thathuvam | Part 1
Автор: IDHU NAMMA OORU இது நம்ம ஊரு
Загружено: 2020-11-21
Просмотров: 23354
Vethathiri Maharishi Seyal Vilaivu Thathuvam Part 1
செயல் விளைவு தத்துவம்
பேராசிரியர் சங்கீதா அறிவுத்திருக்கோயில்
#Vethathiri
#ஆழியார்
#செயல்விளைவுதத்துவம்
வாழ்க வையகம். உலகம் முழுவதும் பக்தி வழியில் பெரும்பாலான மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களிடம் உள்ள ஆழமான தெய்வ நம்பிக்கை சில சமயம் முரண்பாடான விளைவுகளைத் தருவதை அறிகிறோம். அது என்னவெனில், எல்லாம் வல்ல தெய்வத்தை நான் வணங்குகிறேன், ஆண்டவனே! எனக்கு இன்னது வேண்டும், அ...தை நீ கொடு என்று வேண்டிக் கொள்வது பழக்கமாக உள்ளது. அனைவரும் அவ்வாறு வேண்டி அவற்றை பெற்றார்களா? அத்தகைய வேண்டுதல் மூலம் தேவையான பொருட்கள் கிடைத்து மனிதகுலம் நிறைவு பெற முடியுமா? இறைநீதி என்பது மனிதன் கேட்டு இறைநிலை வழங்குவதில்லை. மனிதனுடைய ஒவ்வொரு செயலிலும் அதற்குத் தக்க விளைவுகளைத் தவறாமல் பெற ஏற்ற அமைப்புதான் ”செயல் விளைவு தத்துவம்.”
கடவுளை வேண்டிக் கொண்டு, விளைவுகளுக்குக் காத்துக் கொண்டிருப்பதை விட, என்ன செயல் செய்தால் அந்த விளைவு எனக்குக் கிடைக்கும் என்று சிந்திக்கவும், பயனடையவும் தக்க ஒரு வழியே செயல் விளைவு நீதியாகும். எந்தச் செயல் செய்தாலும் அதற்குத் தக்க விளைவு உண்டாகிறது என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை அனுபவமாக உள்ளது. இந்த அனுபவங்களைக் கொண்டும், முன்னோர்கள் எழுதியுள்ள நூல்களைக் கொண்டும் செயல் விளைவு தத்துவத்தை நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். ஏமாற்றமில்லாமல் பயன் தரக் கூடியதுதான் செயல் விளைவு நீதி.
“ஈசனே தானாக உணர்ந்த போதும்
எழும் பசியை உணவால்தான் போக்க வேண்டும்”
மனிதன் இன்பத்தை நாடுகிறான். வாழ்க்கையில் இலாபத்தை நாடுகிறான். இவற்றிற்காக கடவுளை வேண்டுவதை விட அதற்குரிய செயல்களைக் கண்டுபிடித்து முறைப்படி செய்து பயனடைவதுதான் ஏமாற்றமில்லாத உறுதியான வழிமுறையாகும்.
பொதுவாக பாவம், புண்ணியம் என்ற இரண்டு வார்த்தைகளை மனதில் கொண்டு புண்ணியத்தைத் தேடிக் கொண்டால் எல்லா வளங்களும் கிட்டுமென்பது, அது உண்மையே ஆனாலும், பாவம் எது, புண்ணியம் எது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அதைப் பற்றியும் சிறிது சிந்திப்போம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: