Latest Pongal song l Thai Porandhaa l Aaveykannan l Michael l Shanthi
Автор: Aaveykannan Productions
Загружено: 2019-01-14
Просмотров: 267614
Latest Pongal Song 2019 (வீரத் தமிழர் திருநாள் பாடல்)
Lyrics: Michael
Tune & Music: Aaveykannan
Vocals: Michael & Shanthi
Chorus: Jessy, Nisha, Veronica & Joyce
Camera-Video Editing-Recording: Aaveykannan ( 9941045991 / 9791099128 )
Sound Mixing: Subu Siva @ Waves
Produced by: Aaveykannan productions
Karaoke video song link
• Thai Porandhaa l Pongal song l karaoke Vid...
Pongal footage: from YouTube
பச்சரிசி ஊறவச்சு
அச்சு வெல்லம் சேர்த்து – அத
புத்தம் புது பானையில பொங்க வைப்போம் !
பொங்கி வரும் நேரத்துல
‘பொங்கலோ பொங்கலுனு’ –கூவி
அந்த ஆதவனை வணங்கிடுவோம் !
பல்லவி :
தைப் பொறந்தா வழி பொறக்கும்
தரணியில் ஆனந்தம் பெருகும்
தமிழர்களின் மனதினிலே
சந்தோஷம் எப்போதும் இருக்கும்
விடிகின்ற பொழுதெல்லாம் - இனி
சுகமாய் விடியட்டுமே..
உழவரின் வாழ்வினிலே என்றென்றும்
கரும்பாய் இனிக்கட்டுமே..!
காணும் திசையெல்லாம் – நல்ல
உறவு பெருகட்டுமே
வாழும் காலமெல்லாம் – இனி
வாழ்வு சிறக்கட்டுமே
பொங்கலோ.. பொங்கலோ..
பொங்கலோ பொங்கல் !
சரணம் – 1
பொன்னான நாளிலே.. அண்ணாந்து வானிலே,
காணும் ஞாயிறை கையெடுத்து வணங்குவோம்!
வெள்ளாமை தந்து நம், இல்லாமை போக்கிடும்,
பூமித் தாயை, மண்டியிட்டு வணங்குவோம்!
அரிசிமாவில் கோலம் போட்டு..
கரும்பு கொண்டு பந்தல் செய்வோம்!
வீதியெங்கும் தோரணம் கட்டி,
வண்ண மலர்களால் அலங்கரிப்போமே!
மங்கல சந்தனம் எடுத்து வச்சி,
மஞ்சள்கொத்து கட்டி வச்சி,
பொட்டு வச்ச, பானையில,
பொங்கல் சமைப்போம்!
புத்தம் புதுப்பானையில,
பொங்கி வரும் பொங்கல் போல,
எங்கள் வாழ்வும், பொங்கி வர, வேண்டிடுவோம்!
பொங்கலோ.. பொங்கல்..
பொங்கலோ.. பொங்கல்..
பொங்கலோ.. பொங்கல்..
பொங்கலோ.. பொங்கல்! பொங்கல்!
( தைப் பொறந்தா.. வழி பொறக்கும்
(On the BGM) தொகையறா – 2
உணவிடும் விவசாயியின் உள்ளத்த நாம் போற்றனும்..
உழுதிடும் கால்நடைகளை தேர் போல மாற்றனும்!
புத்திமதி சொல்லித்தரும் பெரியோரை வணங்கனும்..
புத்தம் புது ஆடைகளை உடுத்தி நாமும் மகிழனும்!
சரணம் – 2
ஊரெங்கும் பெருவிழா, பொங்கல் திருவிழா,
இன்பம் கூடும், தமிழர் பண்பாட..
பழையன கழித்து, புதியன புகுத்தி,
வாழையடி வாழையாய் நாமும் கொண்டாட..
சாதி சமய வேற்றுமை களைந்து..
தைத் திருநாளில் ஒன்றாய் இணைந்து!
வண்ண வண்ண ஆடைகள் உடுத்தி..
திருவிழாவை சிறப்பிப்போமே!
உழுதிடும் உழவனின்
உழைப்பினை போற்றியே
உலகெங்கும் அவர் புகழ் பாடிடுவோம்!
‘தை’மகளே வருகவென,
தமிழ் மணக்க குலவையிட்டு,
தமிழ்பெண்கள், ஒன்றாய்க்கூடி, கும்மியடிப்போம்!
பொங்கலோ.. பொங்கல்..
பொங்கலோ.. பொங்கல்..
பொங்கலோ.. பொங்கல்..
பொங்கலோ.. பொங்கல்! பொங்கல்!
( தைப் பொறந்தா.. வழி பொறக்கும்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: