யோக நரசிம்ம பெருமாள் கோவில் | சோளிங்கர் | யோக அனுமன் |அமிர்தவல்லி | Sholingur temple | Ranipet Dist
Автор: NELLAI NARAN
Загружено: 2023-07-21
Просмотров: 218294
சோளிங்கர் மலை (sholingur hill) மீது தவக்கோலத்தில் வருடத்தின் 11 மாதங்களும் கண் மூடி அமர்ந்த நிலையில் காட்சி தரும் நரசிம்மர் (yoga narasimhar), ஒரே ஒரு மாதத்தில் மட்டும் கண் திறந்த நிலையில் காட்சி தருகிறார். இந்த கார்த்திகை மாதத்தில் மட்டும் தனது கண்ணை திறந்து, தன்னை காண வரும் பக்தர்களை பார்த்த நிலையில் காட்சி கொடுக்கிறார் நரசிம்மர்.
சோளிங்கர் மலையில் வெறும் 24 நிமிடங்கள் எவர் ஒருவர் இருந்து வழிபடுகிறாரோ அவருக்கு மோட்சம் கிடைக்கும் அளவிற்கு நரசிம்மர் அருளை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை. வெறும் 24 நிமிடங்கள் இருந்தாலே மோட்சம் தருவார் என்றால் அதிலிருந்தே இந்த யோக நரசிம்மரின் கருணையை தெரிந்து கொள்ளலாம்.
திருமாலின் தசாவதாரங்களில் மிகவும் சிறப்பானதும், தனித்துவமானதுமான அவதாரம் நரசிம்ம அவதாரம் தான். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான், அசைக்க முடியாத பக்தி மற்றும் நம்பிக்கை உடைய பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு தெய்வம் ஓடி வரும் என்பதை உலகம் அறிய செய்த அவதாரம்.
நாளை என்ற சொல்லே தன்னிடம் கிடையாது என பக்தர்கள் வேண்டிய உடனேயே வந்து அருள் செய்ய கூடிய தெய்வமாக நரசிம்ம மூர்த்தி விளங்குகிறார்.
நரசிம்மர் எப்படி உக்கிர மூர்த்தியாக இரண்ய வதம் செய்தாரோ, அதை போல் பக்தர்களிடத்தில் கருணாமூர்த்தியாக இருக்கக் கூடியவர்.
நரசிம்மர் என திருநாமத்தை சொல்லும் போதே தனி தைரியமும், உத்வேகமும் நமக்குள் வரும்.
இழந்த பொருளை, செல்வத்தை, பதவியை, கெளரவத்தை சோளிங்கர் யோக நரசிம்மரும் யோக ஆஞ்சநேயரும் தந்தருள்வார்கள் என்கின்றனர் பக்தர்கள்
108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திகழ்கிறது.
108 திவ்ய தேசங்களில் இது 65-வது திவ்ய தேசம். இத்தலத்தில் உள்ள ஸ்ரீநரசிம்மரை வணங்கினால் குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். வியாபார நஷ்டம் விலகும். லாபம் பெருகும்.
சோளிங்கர் திருத்தலம் 1000-2000 ஆண்டுகள் பழமையானது.
பராங்குச சோழன் கட்டிய 3ம் நூற்றாண்டு கோவில் இது.
Please subscribe and support me
Parvatha Malai Payanam: • பர்வத மலை பயணம் # Parvatha malai payanam #...
Sathuragiri Malai Payanam: • சதுரகிரி மகாலிங்கம் கோவில் | Sathuragiri H...
Vellayangiri Malai Payanam: • வெள்ளையங்கிரி மலை பயணம் | பூண்டி | VELLAIY...
Kondarangiri Malai Payanam: • கொண்டரங்கி மலை | KONDARANGI HILLS | Oddanc...
Tiruthani Murugan Temple: • Tiruthani Murugan Temple # திருத்தணி முருக...
Tirupati : • Tirupati Temple # திருப்பதி சென்று வந்தால்...
Thirumalai Murugan Temple: • திருமலை கோவில் | PanPoli | Tenkasi | Tirum...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: