மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிகப்பெரிய கற்திட்டை
Автор: Udumalai Varalaaru
Загружено: 2024-10-10
Просмотров: 74357
மேற்கு தொடர்ச்சி மலைக்குட்பட்ட கொழுமம் வனச்சரகப் பகுதியில் குவணச்சேரி, குமணச்சேரி ,குமணபுரி என்ற சான்றுகளுக்கான மிகப்பெரிய கற்திட்டை தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி அவர்களால் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்திற்காக ஆவணப்படுத்தப்பட்டது.
கொழுமம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் குமணன் ஆட்சி செய்தமைக்காகவும், குழுமம் என்பதே பிற்பாடு கொழுமம் என்று திரிந்தமைக்கான சான்றுகளும் சங்க இலக்கியப்பாடல்கள் வழியாகவும், கல்வெட்டுசான்றுகள் வழியாகவும் அறியப்படுகிறது.
மேலும், பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் எனும் இரண்டு புலவர்கள் வாழ்ந்தமைக்கான சான்றாக இரட்டையர் பாடி என்று வழக்காற்றில் இருந்த பகுதி பிற்பாடு இரட்டையம்பாடி என்று திரிந்தமைக்கான சான்றுகளும் கிடைத்துள்ளது.
இங்கு ஏற்கனவே கல்வட்டங்களும் கற்திட்டைகளும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினரால் ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வந்தாலும் தற்போது மீண்டும் இரண்டு கல்வட்டங்களை ஆவணப்படுத்தி உள்ளனர். இது கொழுமம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ராயர் குளம் பகுதியில் உள்ளது. இந்தப் பகுதி மக்கள் இதைப் பல ஆண்டுகளுக்கு முன்பே தோண்டிப் பார்த்ததில் மிகப்பெரிய தாழிகளும் (மண்பாண்டங்களும்) எலும்புகளும் இருந்ததாகவும், மீண்டும் அதனுள் போட்டு உள்ளே புதைத்து விட்டதாகவும் கூறுகின்றனர்.
நெல்வயல்களுக்கு இடையில் ஒரு சில கற்வட்டங்கள் இருந்ததை அப்புறப்படுத்தி விட்டதாகவும், படத்தில் இருக்கும் கற்திட்டை மிகப்பெரிய அளவில் இருப்பதையும், இதன் அருகே கற்வட்டங்கள் இருந்ததற்கான வட்ட வடிவிலான பெருங்கற்கால கற்கள் இருந்ததையும் தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி ஆவணப்படுத்தினார்.
மேலும், அவர் கூறும் போது கொழுமம் எனும் குழுமூருக்கு அருகில் இந்த முதிரை மலை இருப்பதும், இங்கு முதிரம் எனும் கொள்ளு விளைந்ததை உறுதிப்படுத்தும் வகையில் இன்றும் இந்தப் பகுதிகளில் மானாவாரியாக கொள்ளு விவசாயம் செய்து வருவதையும் நேரடி கள ஆய்வில் உறுதிப்படுத்தினார்.
ஐவர் மலை பகுதி கல்வெட்டுகளில் குவணச்சேரி எனும் கல்வெட்டு இருப்பதும், ஐவர் மலையிலிருந்து இந்தப் பகுதி மிகவும் அருகமையில் இருப்பதாலும் மலையரண், காடரண் என்று மலைப்பாங்கான பகுதியாக இருப்பதாலும் பெரிய பெரிய அளவிலான கற்திட்டைகள், கல்வட்டங்கள் இருப்பதாலும் இங்கு பெருங்கற்காலத்திற்கு முன்பே பழங்கால மக்கள் வசித்து வந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தலாம் என்று தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி உறுதிப்படுத்தினார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: