ஜாதகபடி உங்களுக்கு விவாகரத்து ஆகுமா ? | Are you divorced in the horoscope? |
Автор: OPTV TAMIL
Загружено: 2019-01-15
Просмотров: 34907
#Astrology 2019 #diverse #india #optvtamil #TamilNadu | #TamilNews | #Latest Tamil News | #LatestNewsTamil #BreakingNews #TodayTamilNaduNews
வாழ்க்கைத் துணையின் அமைப்பு நமது கிரகத்தை வைத்துத்தான் அமையும். நாம் ஆடு, மாடு வாங்குவது கூட கிரகத்தை வைத்துத்தான் இருக்கிறது. நல்ல கிரக அமைப்பு இல்லாவிட்டால் நாம் வாங்கும் ஆடு, மாடு கூட சரியாக அமையாது.
மேலும் லக்னாதிபதி மிகவும் முக்கியம். ஒருவர் பிறக்கும்போது அந்த நேரத்திற்கான லக்னாதிபதியைப் பார்க்க வேண்டும். மேஷ லக்னமா, ரிஷப லக்னமா என லக்னத்தை பார்க்க வேண்டும். அந்த லக்னம் சுபத் தன்மை பெற்று சுப கிரகங்களுடன் சேர்க்கை, சுப நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தால் அவரது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
7ஆம் இடம், 8ஆம் இடத்தில் பாவ கிரகங்கள் அமர்ந்திருந்தாலும் -சின்ன சின்ன சண்டைகள் நடக்கும், அதனால் வாழ்க்கை சிறப்பாக அமையாது. ஆனால் ஒரு சிலருக்கு அவ்வாறு அமைந்தும் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதற்குக் காரணம் சுக்ரன் வலுவாக இருக்கும். சுக்ரன் களத்திரக் காரகன். சிறப்பான துணைக்கு சுக்ரன் தான் காரணம். சுக்ரன் நல்ல விதத்தில் சுபத் தன்மை பெற்றிருந்தால் 7வது, 8வது இடத்தில் பாவ கிரங்கள் இருந்தாலும் வாழ்க்கைத் துணை சிறப்பாகவே அமையும்.
ஆனால் சுக்ரனும் கெட்டு, 7வது, 8வது இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தால் விவாக ரத்து நடக்கும்.
சில ஜாதகங்களை நாம் ஆராய்ச்சிக்குட்படுத்துவோம். அதில் சுக்ரன் சிறப்பாக இருந்தும், 7வது 8வது இடங்களில் நல்ல கிரகங்கள் இருந்தும் விவாகரத்து ஆனவர்களும் இருப்பார்கள்.
அதற்குக் காரணம், இருவருக்கும் அஷ்டமத்து சனி தசை நடக்கும்போது திருமணம் நடந்திருந்தால் இதுபோன்ற நடக்க வாய்ப்பு உண்டு. மாப்பிள்ளைக்கு அஷ்டமத்து சனி, பெண்ணுக்கு ஏழரை சனி நடந்தாலும் அவர்கள் பிரிந்துவிடுவார்கள்.
அப்பாவால் பிரிந்தவர், அம்மாவால் பிரிந்தவர், சகோதரனால் பிரிந்தவர்களும் உண்டு.
ஒரு பெண்ணிற்கு தனுர் லக்னம், லக்னாதிபதி குரு, களத்ரக் காரகன் சுக்ரன். குருவும், சுக்ரனும் ஒரே வீட்டில் அமர்ந்திருந்தார்கள். அந்த பெண்ணுக்கு கணவனா? தாயாரா? யாருக்கு முக்கியத்தவம் தருவது என்ற பிரச்சினை.
ஒரே மகள், அம்மாவையும் விட்டுவிட்டு தனியே போய் விட முடியாது. அம்மாவுடன் இருந்தால் கணவர் கோபித்துக் கொள்கிறார். அப்போது 6ஆம் இடத்திக்குரியவன் பிரச்சினைகளை உருவாக்கக் கூடியவன். 6ஆம் இடத்திற்குரிய கிரகத்தின் தசை நடந்தாலும் பிரிவுக்கான சாத்தியம் உண்டு.
www.optvtamil.com
Social media links
Facebook: facebook/optvtamil
Twitter: twitter/optvtamil
Google+ : Google+/optvtamil
OPTVTAMIL - optvtamil's Official YouTube Channel
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
/ optvtamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: