திருக்குறள்- 82 . தீ நட்பு
Автор: Valli Aarthy
Загружено: 2025-12-19
Просмотров: 108
பொருட்பால்
82. தீ நட்பு
811. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது
812. உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்புஇலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்?
813. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்
814. அமர்அகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை
815. செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று
816. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்
817. நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்
பத்துஅடுத்த கோடி உறும்
818. ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்
819. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
820. எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: