பிரம்மாண்டமாக தயாராகும் தண்ணீர் மாநாட்டு திடல்! 18 வேட்பாளர்கள் அறிமுகம் | மிரளவிடும் சீமான்
Автор: தென்னகம் - Thennagam
Загружено: 2025-11-13
Просмотров: 11924
பிரம்மாண்டமாக தயாராகும் தண்ணீர் மாநாட்டு திடல்! 18 வேட்பாளர்கள் அறிமுகம் | மிரளவிடும் சீமான்
#seeman #thennagam #trending #seemanlatestspeech #naamtamilarkatchi
தவறாமல் தண்ணீர் மாநாட்டிற்கு வாருங்கள்..!
⚫
(15-11-2025, சனிக்கிழமை இடம் : பூதலூர், மாலை 4 மணி )
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழின நீர் மேலாண்மையை பற்றி எப்போதும் உலகிற்கு அறிவிக்கிற கல்லணைக்கு மிக அருகில் உள்ள பூதலூரில் ( திருவையாறு சட்டமன்றத் தொகுதி.) மிக எழுச்சியாக தண்ணீர் மாநாட்டிற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த மாபெரும் மாநாட்டில் சோழமண்டலத்தின் 18 தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானால் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
மாபெரும் மின்னொளி அரங்கத்தில், ஒளி திரைகளுடன் நடக்க இருக்கின்ற இந்த மாபெரும் மாநாட்டில் தண்ணீர் தேவையை பற்றியும், தண்ணீரை முன்வைத்து நடக்கின்ற அரசியலைப் பற்றியும், மாபெரும் வரலாற்றுப் பேருரை நிகழ்த்த அண்ணன் சீமான் சோழமண்டலத்திற்கு வருகை தருகிறார்.
இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வில் தமிழ் உறவுகள் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டுமாய் அன்போடு அழைக்கிறோம்.
எப்படி தண்ணீர் மாநாட்டிற்கு வருவது..??
-------------------------------------------------------------------------
இந்நிகழ்விற்கு தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் இருந்த வருகின்ற உறவுகள் திருச்சி வந்த பிறகு, தஞ்சை முக்கிய சாலையில் சுமார் 26 கிலோமீட்டர் பயணம் செய்த பிறகு செங்கிபட்டி என்ற ஊர் வரும். செங்கிபட்டியை தாண்டி சரியாக 1 கிலோமீட்டர் பயணத்திற்கு பிறகு இடது புறமாக பூதலூர் சாலை முக்கிய சாலையோடு இணையும். அந்த சாலையில் சரியாக 8 கிலோமீட்டர் பயணத்திற்கு பிறகு மாநாடு திடல் வந்துவிடும். கிழக்கு மாவட்டங்களில் இருந்து வருகின்ற உறவுகள் தஞ்சாவூர் வந்த பிறகு திருச்சியை நோக்கிய சாலையில் 24 கிலோமீட்டர் பயணத்திற்கு பிறகு செங்கிப்பட்டிக்கு முன்னதாகவே வலது புறம் பூதலூர் சாலை திரும்பும். அந்த சாலையை பின்தொடர்ந்தால் மாநாட்டு நிகழ்விடத்தை அடையலாம்.
இந்த மாநாட்டிற்கு தேவையான நிதியில் பாதியளவு நிதிக்கூட இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அதனால் மாநாட்டிற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில், உங்களால் இயன்ற நிதி உதவி. மிகவும் அவசியப்படுகிறது. உங்களால் இயன்ற பொருளாதார உதவியை உடனடியாக இந்நிகழ்விற்கு செய்து உங்களுடைய நண்பர்களுக்கும் உதவி செய்ய பரிந்துரை செய்யுங்கள்.
மணி செந்தில்
தண்ணீர் மாநாட்டிற்கு நிதி வழங்க;👇
வங்கி கணக்கு எண் விபரம் :
D.SENTHILNATHAN
AC. NO : 100801000026849
INDIAN OVERSEAS BANK
IFSC : IOBA0001008
MIRC CODE : 613020010
ADDS: SENGIPATTI SENGIPATTI POST, THANJAVUR DT
Gpay -9442248351
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: