Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

சுகப்பிரசவம் ஆக பதிகம் | நன்றுடையானை பதிகம் | திருச்சிராப்பள்ளி பதிகம் | Nandrudaiyanai

Автор: Aalayam Selveer

Загружено: 2020-04-08

Просмотров: 86760

Описание:

Suga Prasavam Pathigam, நன்றுடையானை பதிகம், Tiruchirappalli Pathigam, Nandrudaiyanai, சுகப்பிரசவம் ஆக பதிகம், நன்றுடையானை தீயது இலானை , திருச்சிராப்பள்ளி பதிகம், நன்றுடையானைத் தீயதிலானை விளக்கம், சுகப்பிரசவம் ஆக மந்திரம், சுகப்பிரசவம் பதிகம், நன்று உடையானை.

முதல் திருமுறை பதிகம் : 98

அருளியவர் : திருஞானசம்பந்தர்
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : சிராப்பள்ளி
பாடியவர் : திருவிடை மருதூர் S.சம்பந்த தேசிகர்

எல்லா உயிர்க்கும் தந்தையாகவுள்ள இறைவன் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவி செய்தமையால் தாயுமானவர் (தாயும் ஆனவர்) என்று பெயர் பெற்றார்.

தனகுத்தன் என்ற வணிகன் இவ்வூரில் வசித்தான். கர்ப்பிணியான அவனது மனைவி, உதவிக்கு தாயை அழைத்திருந்தாள். தாயும் அவளது வீட்டிற்கு கிளம்பி வந்தாள். வழியில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவளால் வீட்டிற்கு வரமுடிய வில்லை. இதனிடையே, அவளுக்கு பிரசவ வலி உண்டானது. தன் இஷ்ட தெய்வமான தாயுமானவரை மனம் உருக வேண்டினாள் ரத்னாவதி. அவளது தாய் உருவத்திலேயே ஓடோடி வந்தார் இறைவன். பரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்த்தார்.

காவிரியில் ஒரு வாரம் வரையில் வெள்ளம் ஓடவே, அதுவரையில் சிவன், தாயின் இடத்திலிருந்து அப்பெண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தார். வெள்ளம் வடிந்தபிறகு, ரத்னாவதியின் தாய் வீட்டிற்கு வந்தாள். அவளது வடிவில் மற்றொருவள் இருந்ததைக் கண்ட, இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது சிவன் இருவருக்கும் சுயவடிவில் காட்சி கொடுத்தருளினார். தாயாக இருந்து அருளியதால் இவர்,"தாயுமானவர்' என்று பெயர் பெற்றார்.

இதன் காரணமாக, இத்தலத்து இறைவனை கர்ப்பிணிப் பெண்கள் வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

கர்ப்பிணிப் பெண்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டு, திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற இந்த திருப்பதிகத்தை தினமும் இரண்டு வேளையும் பாடினாலோ /கேட்டாலோ சுகப்பிரசவம் இனிதே நடைபெறும்.

திருச்சிற்றம்பலம்

பாடல் : 1

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே.

பாடல் : 2

கைம்மகஏந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்
செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே.

பாடல் : 3

மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே.

பாடல் : 4

துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்
சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்
கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
பிறைமல்குசென்னி யுடையவன்எங்கள் பெருமானே.

பாடல் : 5

கொலைவரையாத கொள்கையர்தங்கள் மதில்மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்
நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே.

பாடல் : 6

வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது
செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே.

பாடல் : 7

வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர்கோயிற் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே.

பாடல் : 8

மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்
தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்
சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்
சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே.

பாடல் : 9

அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக்
கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீரும்மை யேதிலர்கண்டால் இகழாரே.

பாடல் : 10

நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை
ஊணாப்பகலுண் டோதுவோர்கள் உரைக்குஞ்சொல்
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.

பாடல் : 11

தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல்சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன்
ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார்
வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே.

திருச்சிற்றம்பலம்.

#aalayamselveer #tiruchirappallipathigam #nandrudaiyanai #panniruthirumurai #pathigam #thirugnanasambandar #thirugnanasambantharpathigam #thevaram #thevaramsongsintamil #thevarampadalkal #thevaramsong

சுகப்பிரசவம் ஆக பதிகம் | நன்றுடையானை பதிகம் | திருச்சிராப்பள்ளி பதிகம் | Nandrudaiyanai

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்

Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்

குழந்தை வரம் அருளும் | திருவெண்காட்டுப் பதிகம் | கண்காட்டும் நுதலானும் | சிவன் பாடல் | Sivan Song

குழந்தை வரம் அருளும் | திருவெண்காட்டுப் பதிகம் | கண்காட்டும் நுதலானும் | சிவன் பாடல் | Sivan Song

திருவண்ணாமலையில் என்ன நடக்குது? | Thiruvannamalai issue | Paari Saalan and Varun Tamil podcast

திருவண்ணாமலையில் என்ன நடக்குது? | Thiruvannamalai issue | Paari Saalan and Varun Tamil podcast

Джем – சுகப்பிரசவம் ஆக பதிகம் | நன்றுடையானை பதிகம் | திருச்சிராப்பள்ளி பதிகம் | Nandrudaiyanai

Джем – சுகப்பிரசவம் ஆக பதிகம் | நன்றுடையானை பதிகம் | திருச்சிராப்பள்ளி பதிகம் | Nandrudaiyanai

G.P. Nallasivam Speech about Carnatic Music and Thirumurai Pannisai

G.P. Nallasivam Speech about Carnatic Music and Thirumurai Pannisai

Самая Красивая Музыка В Мире 🌿 Послушайте Эту Музыку И Вам Станет Легче

Самая Красивая Музыка В Мире 🌿 Послушайте Эту Музыку И Вам Станет Легче

சுகப்பிரசவம் அளிக்கும் திருப்பதிகம் (நன்று உடையானைத் தீயது இலானை)....

சுகப்பிரசவம் அளிக்கும் திருப்பதிகம் (நன்று உடையானைத் தீயது இலானை)....

சுகப்பிரசவம் அமைய எளிய வழிமுறைகள், செய்ய வேண்டிய பிரார்த்தனை | Simple tips for Normal Delivery

சுகப்பிரசவம் அமைய எளிய வழிமுறைகள், செய்ய வேண்டிய பிரார்த்தனை | Simple tips for Normal Delivery

FRIDAY SPECIAL ASTALAKSHMI SONGS ||வெள்ளிக்கிழமை அன்று காலையில் கேளுங்கள்  அஷ்டலக்ஷ்மி பாடல்கள்

FRIDAY SPECIAL ASTALAKSHMI SONGS ||வெள்ளிக்கிழமை அன்று காலையில் கேளுங்கள் அஷ்டலக்ஷ்மி பாடல்கள்

#வேலைவாய்ப்பு கிடைக்க தினமும் கேளுங்கள் ராஜ #முருகன் #மந்திரம்

#வேலைவாய்ப்பு கிடைக்க தினமும் கேளுங்கள் ராஜ #முருகன் #மந்திரம்

இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

Friday Popular Mahalakshmi Bakthi Padalgal | Lakshmi Varuvai And Vaibhoga Vazhvu Songs

Friday Popular Mahalakshmi Bakthi Padalgal | Lakshmi Varuvai And Vaibhoga Vazhvu Songs

Kannadhasan - Ponmazhai - Kanakadhara Stotram |கவிஞர் கண்ணதாசனின் பொன்மழை - VERSION 2

Kannadhasan - Ponmazhai - Kanakadhara Stotram |கவிஞர் கண்ணதாசனின் பொன்மழை - VERSION 2

🔴LIVE SONGS | வெள்ளிக்கிழமை செல்வம் பெருக மகாலட்சுமி கவசம் Mahalakshmi Powerful Tamil Devotional

🔴LIVE SONGS | வெள்ளிக்கிழமை செல்வம் பெருக மகாலட்சுமி கவசம் Mahalakshmi Powerful Tamil Devotional

141.நன்றுடையானை தீயதிலானை |திருச்சிராப்பள்ளி | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்

141.நன்றுடையானை தீயதிலானை |திருச்சிராப்பள்ளி | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicals

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicals

அபிராமி அந்தாதி || Abirami Andhadhi - Saradha Raaghav

அபிராமி அந்தாதி || Abirami Andhadhi - Saradha Raaghav

Kanda Sasti Kavasam | Powerful Murugan Bhakti Padalgal | Murugan Tamil Bhakti Songs | Murugan Sasti

Kanda Sasti Kavasam | Powerful Murugan Bhakti Padalgal | Murugan Tamil Bhakti Songs | Murugan Sasti

ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை | | ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | | Sri Garbarakshambigai

ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை | | ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | | Sri Garbarakshambigai

சடையா எனுமால் - தேவார பதிகம் | Sadaiyaa Enumaal - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

சடையா எனுமால் - தேவார பதிகம் | Sadaiyaa Enumaal - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]