14/01/2026 தற்குறிகளின் தமிழீழத்தின் ஆட்சியாளர்கள் இவர்களே!
Автор: Arun Siddharth
Загружено: 2026-01-13
Просмотров: 8138
ஆயுதம் என்பது அதிகாரம்.
பொறுப்பு இல்லாத அதிகாரம் எப்போதும் துஷ்பிரயோகத்திற்கே வழிவகுக்கும்.
வரலாற்றில் பெரும் அழிவுகள் நிகழ்ந்தது:
• சிந்திக்காதவர்களால்
• கேள்வி கேட்காதவர்களால்
• நோக்கம் புரியாமல் ஆயுதம் எடுத்தவர்களால் வரலாறு முழுவதும் ஒட்டு மொத்த மனித குலமும் பேரழிவுகளைச் சந்தித்திருக்கின்றது.
கல்வியும் கொள்கையும் இல்லாதவன் கையில் இருக்கும் ஆயுதம் அதீத ஆபத்தானது. அதை வைத்திருப்பவனுக்குக் கூட அது ஒருநாள் கேடு விளைவிக்கும்.
உண்மையான வலிமை என்பது ஆயுதத்தை தூக்குவதில் இல்லை.
அறிவுதான் ஆயுதத்தை விட வலிமையானது.
“பிறக்கும் ஒவ்வொரு குழுந்தையும் வெல்லும் விருப்புடனேயே காலுன்றி எழுகிறது. உலகை வெல்லவே ஒவ்வொரு புல்லும் இதழ் விரிகிறது. மானுடன் வெல்வதற்கரியது ஒன்றே. அது அவன் அகம். தன்னை வென்றவனே மாவீரன் எனப்படுகின்றான். “
Teach your children there is no glory or heros in wars. That the glory comes from the actions that prevent wars, and the hero’s are the ones who implement those actions.
There is always a way to solve problems without violence. Find it.
உங்கள் குழந்தைகளுக்குச் இவற்றைச் சொல்லிக் கொடுங்கள்:
யுத்தங்களில் பெருமையோ மாவீரர்களோ கிடையாது. யுத்தங்களை நிறுத்துவதில் தான் பெருமை உள்ளது. யுத்தங்களை நிறுத்துவதற்கு அயராது உழைப்பவர்களே புகழப்பட வேண்டிய மாவீரர்கள்.
பிணக்குகளைத் தீர்க்க வன்முறையில்லாமல் ஒரு வழி எப்போதும் இருக்கும். அந்த வழியைக் கண்டடையும் முறையை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.
————-
http://ok.ru/video/2121696217627
என்னுடன் பேசிய பல்கலைக்கழக மாணவர்களுக்கான இரண்டாவது உலக சினிமா இது. இது ஒரு cult classic. 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இரானியத் திரைப்படம் இது.
Children of heaven - சொர்க்கத்தின் குழந்தைகள்.
Majid Majidi - மஜித் மஜிதி எனும் இரானிய இயக்குநர் இயக்கிய 1998 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதின் கடைசி சுற்றுவரைக்கும் சென்ற திரைப்படம் இது. ஒரு மணித்தியாலம் 27 நிமிடங்கள் மட்டுமே செலவழித்து இந்தப் படத்தைப் பார்த்த பின்னர் decode பண்ணுங்கள்.
அதிக வசனங்கள் இல்லை. மிக எளிமையான ஆங்கில subtitle உண்டு. இந்தப் படம் முடியும் போது உங்கள் கண்ணில் இரண்டு சொட்டுக் கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்கும் ஆனால் இது சோகம் படம் அல்ல. மாறாக இரு குழந்தைகள் ஊடாக “வாழ்வின் அர்த்தத்தை சினிமா என்னும் காட்சி ஊடகம் வலிமையுடன் எடுத்துரைக்கின்றது.
மானுடத்தின் மேல் காதல் கொள்ள வைக்கும் இந்தப்படம். Sarah - சாரா , Ali - அலி ஆகிய அந்த இரண்டு குழந்தைகளையும் நீங்கள் கட்டியணைத்து முத்தம் கொடுக்க முயற்சிப்பீர்கள்.
இந்தப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் மானுட வாழ்வின் நெறிகளை எடுத்தியம்பும் அர்த்தங்கள் உண்டு.
மாணவர்களே நீங்கள் decode பண்ணவேண்டிய இடங்கள் பல உண்டு. இந்தப்படத்தின் பெயரை Google இல் போட்டு இது தொடர்பாக வந்த தமிழ் விமர்சனங்களையும் படியுங்கள்.
ஒருவர் எழுதியிருந்தார்….
“இந்தப் படம் பார்த்த அன்று என் கனவில் இரான் நகர தெருக்களில், செருப்பின்றி நடந்தேன்.” என்று.
ஆம் நானும் அவ்வாறே உணர்ந்தேன்.
இந்தப்படம் பார்த்த பின்னர் உங்களிடம் வன்முறைக்காக ஒரு கத்தியிருந்தால் கூட அதைத் தூக்கி எறிவீர்கள். ஏன் என்று கேட்டால் எனக்குச் சொல்லத் தெரியவில்லை….
அருண் சித்தார்த்
யாழ்ப்பாணம்
14/01/2026
+94774842464
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: