பேய், குலதெய்வம் உண்டா?-17ஆம் நாள்-ஷாலினி தொலைக்காட்சியில் 'கனவு மெய்ப்பட' தலைப்பில் எனது உரை
Автор: Inlife Sivakumar
Загружено: 2023-12-07
Просмотров: 162
ஷாலினி தொலைக்காட்சி (Shalini TV ) - யில் 'கனவு மெய்ப்பட' தலைப்பில் 17-ஆம் நாள் நான் ஆற்றிய உரையிலிருந்து...
சுற்றத்தார் பலர் நிறைந்திருந்த ஒரு இறப்பு நிகழ்ச்சியில், ஒரு பெண்மணியின் மீது அவரவர்களின் குல தெய்வங்களை வரவழைத்துப் பேச வைத்தோம்.
ஒரு பெண்மணி அருள்வாக்கு சொல்லக்கூடியவர். அவருக்கு ஒரு கட்டத்திற்குப் பிறகு அப்படி அருள் வாக்கு சொல்வது பிடிக்கவில்லை. சாதாரண பெண்ணாகவே வாழ்வதற்கு அவருக்கு விருப்பம் ஏற்பட்டது. ஆகவே, தனக்குள் உள்ள அந்த அருள் வாக்கு சொல்லும் சக்தியை எடுத்து விடுங்கள் என்று வந்திருந்தார். அவரின் விருப்பப்படியே அந்த அருள் வாக்கு சொல்லும் சக்தியை அவரிடமிருந்து நீக்கிவிட்டோம். அதன் பிறகு அவர் எல்லா பெண்மணிகளையும் போல மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்.
ஒரு கோயிலில் ஒருவருக்கு பொன்னியம்மன் தெய்வம் வந்து அருள்வாக்கு சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய நெற்றிப் புருவத்தைப் பார்த்து 'உனக்கு வந்திருப்பது பொன்னியம்மன் அல்ல, ரத்தக் காட்டேரி வந்திருக்கிறது, நீ இப்பொழுது ரத்தக் காட்டேரியாக நடந்து கொள்வாய்’ என்று சொல்லி கட்டளையிட்ட உடனே, அவர் ரத்தக்காட்டேறியாக கத்த ஆரம்பித்துவிட்டார். அவரை அழைத்து வந்தவர் விபூதியைப் பூசி 'கோயிலுக்குள் கெட்ட ஆவிகள் எல்லாம் வரக்கூடாது’ என்று அவரை அழைத்துக்கொண்டு போய்விட்டார். அதாவது, ஒரே மனிதரின் ஆழ்மனதை எப்படி உருவகப்படுத்த முடிகிறது என்பதற்கு இவை எல்லாம் உதாரணங்கள்.
ஆழ்மனது நேரடியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடிய இடங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று, மருள் வந்து அருள் வாக்கு சொல்வது. இரண்டாவது, பேயாக வெளிப்படுவது.
ஹிப்னாடிசத்தில் பயணிக்கும்போது இப்படியான பல்வேறு அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.
நமது வாழ்க்கையில் சாதனை புரிவதற்கு, வெற்றி அடைவதற்கு, நம் உறவுமுறைகளைப் பலப்படுத்துவதற்கு எப்படி ஆழ்மனதைப் பயன்படுத்தலாம்.
ஹிப்னாடிச சிகிச்சையின் மூலமாக மாமியார் - மருமகள் உறவுகளை மேம்படுத்த முடியும்.
என்னிடம் பணிபுரிந்த ஒரு பெண்மணி, 'சார், நான் என் தாய் வீட்டில் இருந்ததைவிட என்னுடைய புகுந்த வீட்டில் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார். இப்போது என் ஹிப்னாடிச வகுப்பில் பயின்று கொண்டிருக்கிற ஒரு மாணவியின் மாமியார் பக்கத்துத் தெருவில் இருக்கிறார். அவர் நாள்தோறும் மகமகள் வீட்டுக்கு வந்து இவரின் முகத்தைப் பார்த்துவிட்டுத்தான் வேலைக்கே போவார். அதேபோல, வேலை முடிந்து வரும்போது, தன்னுடைய மருமகளை வந்து பார்த்து விட்டுத்தான் வீட்டுக்கே போவார். அந்த மருமகளிடம் மாமியார், 'அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், உனக்கு நான் மகளாகப் பிறக்க வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். இப்படியான மேம்பட்ட ஒரு மாமியார் - மருமகள் உறவை எப்படியெல்லாமோ பாழ்படுத்திக் கொள்கிறார்கள்.
மாமியார் தன்னுடைய மகளை அன்பாய், பாசமாய் கவனித்துக் கொள்ள வேண்டும். அதேபோல, மருமகள் தன்னுடைய மாமியார் மீது அன்பாய், பாசமாய் இருக்கவேண்டும். இந்த கனவுகளை எல்லாம் அவர்களின் ஆழ்மனங்களில் விதைத்துவிட்டோம் என்றால், அங்கே மிகச்சிறந்த மாமியார் - மருமகள் நட்பு உண்டாகுவது உறுதி என்பதை நாங்கள் நேரடியாகப் பார்த்திருக்கிறோம்.
எங்களிடம் சிகிச்சை பெற்ற பிறகு, ஒரு மருமகள் தன்னுடைய மாமியாரை அழைத்து வந்து சொல்கிறார், 'நான் என் மாமியாரைப் பற்றி தவறான அபிப்ராயம் கொண்டிருந்தேன், உண்மையில் அவர் தங்கமான மாமியார்’ என்று சொல்கிறார். அந்த மாமியரோ, 'நான் என் மருகளைப் பற்றி தவறாக நினைத்திருந்தேன், என் மருமகள் தங்கமானவள்’, என்று சொல்கிறார். இதுதான் அவர்கள் விரும்பிய உறவு. அதை ஹிப்னாடிசம் மூலம் கொடுக்கமுடியும்.
மற்றும் பல...
The Course Director Dr.S.Sivakumar is a
Consultant Psychologist and Hypnotist.
He, along with Hypnotist Ramamurthy conducts couse on
Holistic Mesmerism and Hypnotism
and
Chino-Indian Acupressure
at
I am an IAS academy
3362-B, AE-Block,
8th Street, 10th main road,
Anna Nagar, Chennai 600 040
Tamil Nadu
India
#motivation #mindpower #mesmerism #hypnotism #subconscious
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: