Top 10 Magnificent temples in India | Top 10 Famous Shiva Temples in India l Mk tamil
Автор: Mk Tamil
Загружено: 2022-06-26
Просмотров: 10824
Join to paid membership & Get More Benefits
/ @mktamil
Top 10 Magnificent temples in India | Top 10 Famous Shiva Temples in India l Mk tamil
சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெறும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன.
இவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும், இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைவற்றையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாகச் சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய புராணங்களிலும், இந்து தொன்மவியல் கதைகளிலும் மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார்.
சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள், அன்பாக அருட் பெருஞ் சோதியாக, இன்பமாக மங்களமாக மறைபொருளாக எங்கும் நீக்க மறநிறைந்திருக்கும் அந்த பரமனைக் கடல் கொஞ்சும் குமரி முதல் கைலைப்பனிமலை வரை ஆலயங்கள் பலவற்றில் அமர்த்தி வழிபட்ட பெருமை மிக்கது நமது புண்ணிய பூமி.
இந்தியாவில் ஏராளமான சிவபெருமானுடைய கோவில்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கோவில்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் அழகானதும் மெய்சிலிர்க்க வைக்கக்கூடியதுமாக இருக்கிறது. பல கோவில்கள் மிகச் சிறந்த கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதில் ஒரு சில முக்கியமான10 கோவில்களை பற்றி இன்றைய வீடியோவில் பார்ப்போம்.
அமர்நாத் கோவில், காஷ்மீர்
இந்தியாவின் மிகவும் பிரபலமான சிவன் கோயில்களில் ஒன்று அமர்நாத் கோயில். இந்த கோயிலில் நடைபெறக்கூடிய அமர்நாத் யாத்திரை எல்லா பக்தர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. வாழ்க்கையில் ஒருமுறையாவது வர வேண்டும் என எல்லா சிவ பக்தர்களும் நினைக்கும் ஒரு இடம். இது ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரு குகையில் 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது ஜம்மு காஷ்மீரின் பாதல் காம், அனந்த்நாக் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு மே முதல் ஆகஸ்ட் வரை பனி லிங்கமானது தானாகவே உருவாகின்றது. இந்த கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானவை என புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குகையின் புராணக்கதை பலவாறாக சொல்லப்படுகிறது.
கேதார்நாத் கோவில், உத்தரகண்ட்
கேதார்நாத் 12 ஜோதிர்லிங்கசிவ ஸ்தலங்களில் ஒன்று. இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான சிவன் கோயில் இது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் உள்ள சிவாலிக் மலைத்தொடரில் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்கு நிலவக்கூடிய மிகவும் கடுமையான குளிர் காரணமாக இந்த கோவில் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளி வரை மட்டுமே திறந்திருக்கும்
காசி விஸ்வநாத் கோவில், உத்தர பிரதேசம்
காசி விஸ்வநாத் கோவில் மிகவும் புகழ்பெற்ற சக்தி வாய்ந்த சிவபெருமான் கோவில். இந்த கோவில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ளது. தற்போது இது வாரணாசி என அழைக்கப்பட்டாலும் முற்காலத்தில் இது காசி என அழைக்கப்பட்டதால் இது காசி விஸ்வநாத் கோயில் என அழைக்கப்படுகிறது
கைலாஸ்நாத் கோவில் மகாராஷ்டிரா
இந்தியாவின் மிகச் சிறந்த சிவன் கோவில்களில் ஒன்றான கைலாஸ்நாத் கோவில் எல்லோராவில் அமைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோராவில் அமைந்துள்ள இந்த குகைக்கோயில் மிகப்பெரிய ஒரு மலையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது மலை உச்சியில் இருந்து செங்குத்தாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சோம்நாத் கோவில், குஜராத்
குஜராத்திலுள்ள சோம்நாத் சிவன் கோயில் இந்தியாவின் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று. இது கிர்சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இது கடற்கரையின் அருகில் பரந்து விரிந்து காணப்படுவதால் பக்தர்கள் அதன் அழகைக் காண அதிக அளவில் வருகிறார்கள்.
தஞ்சை பெரிய கோவில், தமிழ்நாடு
தஞ்சாவூரில் இருக்கக்கூடிய தஞ்சை பெரிய கோயில், பிரகதீஸ்வரர் கோவில் என்ற பெயரில் வடமாநிலங்களில் சொல்லப்படுகிறது. இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக காணப்படுகிறது.சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சையை ஆண்ட மன்னன் ராஜராஜசோழன் என்னும் அருள்மொழி வர்மன் தான் இந்த கோவிலை கட்டினார். இப்போது எல்லாருக்கும் இந்த கோவிலின் பெயர் தஞ்சை பிரகதீஸ்வர் கோவில் என்று தான் தெரியும். ஆனால், சோழ மன்னன் இந்த கோவிலுக்கு வைத்த பெயர் தஞ்சை பெருவுடையார் கோவில். காலப்போக்கில் இது தஞ்சை பெரிய கோவில் என்று மாறிவிட்டது. இடைக்காலத்தில் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னன் இந்த கோவிலை பிரகதீஸ்வர் கோவில் என்று பெயர் மாற்றினார். அது தான் இப்போது வரை நடைமுறையில் இருக்கிறது.
ஸ்ரீகாளஹஸ்தி கோவில், ஆந்திர பிரதேசம்
ஸ்ரீகாளகஸ்தி கோவில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் சித்தூரில் அமைந்துள்ள இந்தியாவின் புகழ்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்று. இந்த சிவன் கோயில் ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
திருவண்ணாமலை கோவில்
மிகவும் பழமையான கோவில்களில் இந்த திருவண்ணாமலைக் கோவிலும் ஒன்று. இக்கோவிலின் இறைவன் சிவபெருமான் “அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர்” அம்பாள் “உண்ணாமுலையாள், அபிதகுஜாம்பாள்” என்றும் அழைக்கப்படுகின்றனர்.
பைதியநாத் கோவில் ஜார்கண்ட்
பைதியநாத் கோவில் ஜார்கண்ட் மாநிலத்தின் சந்தல் பர்கனாஸில் உள்ள தியோகரில் அமைந்துள்ளது. இந்த கோவில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. இந்தக் கோவிலில் இராவணன் சிவபெருமானை வணங்கி வரங்களைப் பெற்றான் என்பது ஐதீகம்.
இராவணன் தன்னுடைய பத்து தலைகளையும் சிவபெருமானுக்காக ஒவ்வொன்றாக வெட்ட தொடங்கினான். அவனுடைய பக்தியைக் கண்ட சிவபெருமான் ராவணன் காயத்தை ஆற்றுவதற்காக வைத்தியராக அங்கு வந்து அவனை காப்பாற்றி உள்ளார்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: