Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

கணக்கன்பட்டி ஓம் ஸ்ரீ சற்குரு பழனிசாமி சுவாமிகள் (மூட்டை சுவாமிகள்) ஆலயம் ஓர் பார்வை

Автор: Sri Sarguru Palaniswamigal

Загружено: 2019-09-26

Просмотров: 66399

Описание:

பழனி மூட்டை சாமிகள்

பழனி அருகே கணக்கன்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து என்ற பழனி சுவாமிகள். எப்போதும் அழுக்கு மூட்டைகளுடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்ததால் இவர் மூட்டைசித்தர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

பழநியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது கணக்கன்பட்டி. சிறு கிராமம். இங்குள்ள டீக்கடை, மளிகைக்கடை, பங்ச்சர் கடை, பெட்டிக்கடை என்று எல்லா கடைகளிலும் வீடுகளிலும் இவரது வண்ணப்படம் போட்ட நாட்காட்டி மாட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் தேதி கிழித்து, அவர் முகத்தில்தான் விழிக்கிறார்கள். ஊர்க்காரர்கள் இவரை 'பகவான் ஞான வள்ளல்' என்றும், 'சத்குரு' என்றும் அழைக்கிறார்கள். 'சித்தரின் அவதாரம் இவர்' என்கிறார்கள்.

எவரேனும் இவரிடம் பணமோ, பொருளோ கொடுக்க வந்தால், முதலில் அவர்களை விரட்டி விடுவார். எவரிடம் இருந்தும் சல்லிக் காசு வாங்க மாட்டார். யாரிடமும் எதுவும் கேட்கவும் மாட்டார். இப்போது கூட இவரின் சில பக்தர்கள், இதே கணக்கன்பட்டியில் இவர் தங்குவதற்காக ஒரு 'சித்சபை' கட்டி வருகிறார்கள். அதற்கு இவர் முறையாக ஒப்புதல் தரவில்லை. அந்த அளவுக்கு ஒதுங்கியே இருப்பார்.

மூட்டை சுவாமிகளின் அற்புதங்கள் என்று ஒரு பக்தர் நம்மிடம் சொன்னவை: ''ஒரு மழைக் காலத்தில், அதிக வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின் வயர் ஒன்று அறுந்து, நடு ரோட்டில் விழுந்து கிடந்தது. இதைக் கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கி அந்தப் பக்கமே செல்லாமல் இருந்தனர். சுவாமிகள் ரொம்ப சாதாரணமாகச் சென்று அந்த வயரைத் தன் கையால் எடுத்து அப்புறப்படுத்திப் போட்டார்...

சுவாமிகள் தியானத்தில் ஒரு முறை பேச்சற்றுக் கிடந்தபோது, பதறிப் போன சேலத்து பக்தர் ஒருவர், இவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டுப் போயிருக்கிறார். அங்கு சுவாமிகளைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், 'மூச்சே இல்லை. இறந்து விட்டார்!' என்று ரிப்போர்ட் எழுதி, இவரை மார்ச்சுவரியில் வைத்திருக்கிறார்கள்.

அடுத்த சில மணி நேரங்களில் சுவாமிகள், பழநியில் ஒரு மலையில் தவத்தில் இருந்தாராம். மார்ச்சுவரியில் சுவாமிகள் இருந்த அறையைத் திறந்து பார்த்த ஆசாமிக்கு அதிர்ச்சி... அங்கே இவர் இல்லை.

பழநி கல்லூரியில் வேலை பார்த்து வந்த பேராசிரியர் ஒருவர், இன்ன தேதியில் இறக்கப் போகிறார் என்பதை முன்கூட்டியே சொல்லி இருந்தார் சுவாமிகள். எந்த ஞான திருஷ்டி மூலம் சுவாமிகள் சொன்னாரோ தெரியவில்லை...

சுவாமிகள் சொன்ன தேதியில் திடீரென உடல் நலக் குறைவாகி இறந்து விட்டார்.

இப்படி நிறைய சம்பவங்களை அனுபவங்களாகச் சொல்லலாம்.''

மூட்டை சுவாமிகளின் இயற்பெயர் 'பழனிச்சாமி' என்று ஓர் அன்பர் சொன்னார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வரை மூட்டை ஸ்வாமிகள் வசித்து வந்த இடம்: பழநி- திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள பழநி கலைக் கல்லூரி வாசலில். கலர் வேஷ்டி... மேலே ஒரு முழுக்கைச் சட்டை... தலையில் ஒரு முண்டாசு. பெரும்பாலும் வேஷ்டியை மடித்துக் கட்டி இருப்பார். இவர் உடுத்தி இருக்கும் துணிகள் பெரும்பாலும் கந்தலாகவே காணப்படும்.

இவரது இடது தோள்பட்டையில் ஒரு பெரிய மூட்டை தொங்கிக் கொண்டிருக்கும். ரொம்ப கனமான மூட்டை. அதற்குள் என்ன இருக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. புளிய மரத்தின் அடியில், தான் ஓய்வெடுக்கும்போது மரத்தின் ஒரு கிளையில் தன் கண்களில் படும்படி மூட்டையைத் தொங்க விட்டிருப்பார். ஆர்வக்கோளாறின் காரணமாக- சில நேரங்களில் எவரேனும் அந்த மூட்டை அருகே நெருங்கினால் போதும்... கன்னாபின்னாவென்று கத்தி விட்டு, அவர்களை விரட்டி விடுவார். தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் அந்தக் கந்தல் மூட்டையை விடாமல் தூக்கிச் செல்வதால், அந்தப் பகுதிவாசிகளால் 'மூட்டை ஸ்வாமிகள்' என அழைக்கப்பட ஆரம்பித்தார் இவர்.

தவிர, சுவாமிகள் சில நேரங்களில் வந்திருப்பவர்களை விரட்டியும் விடு வார். உடனே, அங்கிருந்து அவர்கள் போய் விட வேண்டும். ரொம்ப நேரம் இவரை தரிசனம் பண்ணிக் கொண்டு இங்கேயே உட்கார்ந்திருக்கலாம் என்று இருக்கக் கூடாது. வந்தோமா, தரிசனம் பண்ணினோமா என்று நகர்ந்து விட வேண்டும்.

சிலரை ஏதோ வேலைகள் செய்யச் சொல்வார். என்ன வேலை தெரியுமா? மண்ணை அள்ளிக் குவிக்கச் சொல் வார். சாக்கடைத் தண்ணீரை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் மாற்றி ஊற்றச் சொல்வார். இதற்கெல்லாம் பக்தர்கள் முகம் சுளிக்கக் கூடாது. இதன் மூலம் அவர்களது வினையை சுவாமிகள் விரட்டுகிறார். அதுதான் நிஜம்.

பொதுவாக சித்தப் புருஷர்கள் ..மகான்கள் தன்னலம் இல்லாதவர்கள். சிலரெல்லாம் இப்பொழுது எப்படி எப்படியோ இருக்கிறார்கள். ஆனால், இவர் ஒரு மாட்டுக் கொட்டகை போன்ற ஒரு இடத்தில்தான் தங்கினார் . எங்கேயாவது சென்று உட்கார்ந்து கொண்டு எதையாவது சொல்லிக் கொண்டு இருப்பார். இதையெல்லாம் நம்மால் புரிந்துகொள்ள முடியாது.

இந்த மகான் சமாதி அடைந்தது (01 -03-2015)

..இப்போதும் நம்மோடு வாழ்ந்து கொண்டு ,பக்தர்களின் பாவங்களை மூட்டையாக சுமந்து , உலகம் மெங்கும் தம் பக்தர்களை காத்து ரட்சித்து அருள் புரியும் பழனி கணக்கம் பட்டியில் வாழும் ஞான வள்ளல் சற்குரு பழனி மூட்டை சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி !!!

ஞான வள்ளல் சற்குரு பழனி மூட்டை சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி !!!

-"Dr. Star Anand Ram" அவர்கள் அய்யாவை பற்றி எழுதிய கட்டுரை

கணக்கன்பட்டி ஓம் ஸ்ரீ சற்குரு பழனிசாமி சுவாமிகள் (மூட்டை சுவாமிகள்) ஆலயம் ஓர் பார்வை

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

கணக்கன்பட்டி ஓம் ஸ்ரீ சற்குரு பழனிசாமி சுவாமிகள் (மூட்டை சுவாமிகள்) அமாவாசை அன்னதான நிகழ்வு

கணக்கன்பட்டி ஓம் ஸ்ரீ சற்குரு பழனிசாமி சுவாமிகள் (மூட்டை சுவாமிகள்) அமாவாசை அன்னதான நிகழ்வு

கணக்கன்பட்டி ஓம் ஸ்ரீ சற்குரு பழனிசாமி சுவாமிகள்(மூட்டை சுவாமிகள்)ஆலயம் வருஷாஅபிஷேகம் ஓர் பார்வை :-

கணக்கன்பட்டி ஓம் ஸ்ரீ சற்குரு பழனிசாமி சுவாமிகள்(மூட்டை சுவாமிகள்)ஆலயம் வருஷாஅபிஷேகம் ஓர் பார்வை :-

01) Sangu Siddhar Guindy Thatha Siddhar தாத்தா சித்தர் என்னும் சாங்கு சித்தர்

01) Sangu Siddhar Guindy Thatha Siddhar தாத்தா சித்தர் என்னும் சாங்கு சித்தர்

SARGURU TV 🌻🌽 பகவானின் பார்வை பாவ விமோட்ச்சனம் ( 7 )

SARGURU TV 🌻🌽 பகவானின் பார்வை பாவ விமோட்ச்சனம் ( 7 )

நோய்களையும் கர்ம வினைகளையும் தீர்க்கும் ஜீவசமாதி! Moondravathu Kann New[Epi 278](08/01/19) Part 2

நோய்களையும் கர்ம வினைகளையும் தீர்க்கும் ஜீவசமாதி! Moondravathu Kann New[Epi 278](08/01/19) Part 2

3000 year's old mysterious siddhar samadhi found in ponmar village near chennai | shivaya namah TV

3000 year's old mysterious siddhar samadhi found in ponmar village near chennai | shivaya namah TV

Sarguru audios

Sarguru audios

Thiruvannamalai Karthigai Deepam | ஜோதி வடிவாக காட்சி அளிக்கும் அண்ணாமலையாரே.. நேரலை

Thiruvannamalai Karthigai Deepam | ஜோதி வடிவாக காட்சி அளிக்கும் அண்ணாமலையாரே.. நேரலை

பழனி  சற்குரு   மூட்டை சித்தர்  நிகழ்த்திய அற்புதம்

பழனி சற்குரு மூட்டை சித்தர் நிகழ்த்திய அற்புதம்

6-12-2025/ எட்டையாபுரம் சனிக்கிழமை ஆட்டு சந்தை தூத்துக்குடி

6-12-2025/ எட்டையாபுரம் சனிக்கிழமை ஆட்டு சந்தை தூத்துக்குடி

Anbu Rusi Theriyathu   Satguru Palani Kanakkanpatty Moottai Samy   Siddhar Swamigal

Anbu Rusi Theriyathu Satguru Palani Kanakkanpatty Moottai Samy Siddhar Swamigal

SARGURU TV  சற்குருவின் குரல் ( 4 )

SARGURU TV சற்குருவின் குரல் ( 4 )

KANAKKANPATTI | NaMMaGURU PALANISWAMIGAL

KANAKKANPATTI | NaMMaGURU PALANISWAMIGAL

Siddhargal Thiruvadi | Epi. 0241 | Ponnambala Swamigal | Miracle Siddhars | Sembakkam | Thirupporur

Siddhargal Thiruvadi | Epi. 0241 | Ponnambala Swamigal | Miracle Siddhars | Sembakkam | Thirupporur

MP3 song 🙏 10 Anbenum Vadive Potri

MP3 song 🙏 10 Anbenum Vadive Potri

கணக்கன்பட்டி சத்குருவின் மலரும் நினைவுகள்.நாமக்கல்

கணக்கன்பட்டி சத்குருவின் மலரும் நினைவுகள்.நாமக்கல்

நேரில் வந்து உதவி செய்த

நேரில் வந்து உதவி செய்த "கணக்கன்பட்டி மூட்டை சாமி"அதிசய காணொளி #சிவபிரபஞ்சம் #சப்த சாகர

கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள்  | Aavigal Ulagam  October 1, 2020

கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் | Aavigal Ulagam October 1, 2020

Алексей Венедиктов*. Без посредников / 10.12.25

Алексей Венедиктов*. Без посредников / 10.12.25

Otha Swamigal Dindigul |  Siddhar magimai | Subbiah swamigal | Dindigul Malaikottai (Rockfort)

Otha Swamigal Dindigul | Siddhar magimai | Subbiah swamigal | Dindigul Malaikottai (Rockfort)

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]