பெரியார் திகவினரை விரட்டி விரட்டி அடித்த நாதகவினர் NTK vs Periyarist | Seeman | erode east election
Автор: Dinamalar
Загружено: 2025-02-02
Просмотров: 37551
#Partnership பெரியார் திகவினரை விரட்டி விரட்டி அடித்த நாதகவினர் NTK vs Periyarist | Seeman | erode east election
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 5ம் தேதி நடக்கிறது. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 46 பேர் போட்டி களத்தில் உள்ளனர்.
நாளையுடன் பிரசாரம் ஓய்வதால் இன்று திமுக, நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் உள்ள தேவாலயத்தில் ஞாயிறு பிரார்த்தனை முடிந்து வந்த கிறிஸ்தவர்களிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தனது ஆதரவாளர்களுடன் ஓட்டு கேட்டார்.
அந்த வழியாக வந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் திமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு துண்டு பிரசுரம் வழங்கினர்.
பெரியார் பற்றி விமர்சித்த சீமானை தாக்கி அந்த நோட்டீசில் கார்ட்டூன் படம் வரைந்திருந்தனர்.
அதாவது, பாதி நாம் தமிழர் கட்சிக்காரர் போலவும் பாதி பாஜவை சேர்ந்தவர் போலவும் சீமானை சித்தரித்து காட்டி இருந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாம் தமிழர் கட்சியினர், தபெதிகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
மீண்டும் அதே பகுதியில் அதே நோட்டீசை தபெதிகவினர் வினியோகம் செய்வதை பார்த்த நாம் தமிழர் கட்சியினர் கொந்தளித்தனர்.
தபெதிகவினர் சிலரை நாம் தமிழர் கட்சியினர் விரட்டி விரட்டி அடித்ததால் பதற்றம் தொற்றியது.#NTKvsPeriyarist #Seeman #erodeeastelection
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: