உம்மை ஒருபோது நான் மறவேன் மீரா | திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து தீன் | E.M.Hanifa Tamil Song
Автор: inspiring fuels
Загружено: 2023-02-15
Просмотров: 27470
குத்புல் அக்தாப் கருணைக்கடல் செய்யதினா அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீது (நாகூர் எஜமான்) அவர்களின் புகழ் பாடல்.
பாதுஷா நாயகத்தின் மீது அன்புகொண்டு ஹஜ்ரத் குணங்குடி மஸ்தான் அப்பா அவர்கள் பாடிய அறியபொருட்கொண்ட உள்ளார்ந்த புகழ்பாடல்....
திக்குத் திகந்தமுங் கொண்டாடியே வந்து
தீன் கூறி நிற்பர் கோடி!
சிங்கா சனாதிபர்கள் நதரேந்தியே வந்து
ஜெய ஜெயா வென்பர் கோடி!
ஹக்கனருள் பெற்ற பெரியோர்க ளொலிமார்கள்
அணி அணியாய் நிற்பர் கோடி!
அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞானிகள்
அணைந்தருகு நிற்பர் கோடி!
மக்க நகராளு முஹம்மது ரஸூல்தந்த
மன்னரே என்பர் கோடி!
வசனித்து நிற்கவே கொலுவீற்றி ருக்குமும்
மகிமை சொல வாயுமுண்டோ
தக்க பெரியோனருள் தங்கியேநிற்கின்ற
தவராஜ செம்மேருவே!
தயை வைத்தெனையாள் சற்குணங் குடிகொண்ட
ஷாஹுல் ஹமீதரசரே!
_____________________________END_______________________________________
துன்பங்கள் எழும்போது உம் புகள் பாடி
நிம்மதி அடைவேனே தினம் தினம் நாடி
துன்பங்கள் எழும்போது உம் புகள் பாடி
நிம்மதி அடைவேனே தினம் தினம் நாடி
அன்புடன் ஆளுகின்ற அண்ணலே பூமா
அடியார்கள் கொண்டாடும் இசுலாத்தின் பீமா
அடியார்கள் கொண்டாடும் இசுலாத்தின் பீமா
உம்மை ஒருபோது நான் மறவேன் மீரா
ஷாஹே மீரா.
எம்மான் நபிநாதர் வாஞ்சைமிகும் பேரா
நா..கூர் மீரா
எம்மான் நபிநாதர் வாஞ்சைமிகும் பேரா
நா..கூர் மீரா
மாணிக்கபூ...ர் தனில் தோன்றிய சீலா
மாதவராம்... ஹசன் குத்தூஸின் பாலா
மாணிக்கபூ...ர் தனில் தோன்றிய சீலா
மாதவராம் ஹசன் குத்தூஸின் பாலா
ஆணவமில்லாத அருங்குலமேதா
ஆழியநீதியின் ஆற்றல்செங்கோலா
ஆழியநீதியின் ஆற்றல்செங்கோலா
உம்மை ஒருபோது நான் மறவேன் மீரா
ஷாஹே மீரா.
எம்மான் நபிநாதர் வாஞ்சைமிகும் பேரா
நா..கூர் மீரா
எம்மான் நபிநாதர் வாஞ்சைமிகும் பேரா
நா..கூர் மீரா
கருணையின் வடிவாக விளங்கிடும் கோனே
ஹஞ்ஷவாயெனும் காதிர் மீரானே
கருணையின் வடிவாக விளங்கிடும் கோனே
ஹஞ்ஷவாயெனும் காதிர் மீரானே
தருணம் என்..முகம் பார்த்திடவேண்டும்
தாமதம் ஏன் இன்னும் கூறிடவேண்டும்
தாமதம் ஏன் இன்னும் கூறிடவேண்டும்
உம்மை ஒருபோது நான் மறவேன் மீரா
ஷாஹே மீரா.
எம்மான் நபிநாதர் வாஞ்சைமிகும் பேரா
நா..கூர் மீரா
எம்மான் நபிநாதர் வாஞ்சைமிகும் பேரா
ஷா..ஹே மீரா.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: