முடக்கப்பட்ட முதல் மலையாள சினிமா | பி.கே. ரோஸி | ஜே.சி டேனியல் | விமல் ராஜ்
Автор: THOZHA MEDIA
Загружено: 2025-05-21
Просмотров: 222
1903இல் இன்றைய திருவனந்தபுரத்திலிருக்கும் பெயடு என்னும் ஊரில் ஒடுக்கப்பட்ட இந்து தலித் (புலயர்) குடும்பத்தில் பிறந்தவர் ராஜம்மா. அமத்தரா என்னும் ஊரில் மலையடிவாரத்தில் நெல்வயல்களுக்கருகில் குடிசையொன்றினில் பெற்றோருடன் வாழ்ந்துவந்தார். மிகவும் மோசமான சாதிக்கொடுமைகளுக்கிடையில் தான், தங்களது அன்றாட வாழ்க்கையினை நகர்த்திச்செல்ல வேண்டியிருந்தது அவ்வூரில் வாழ்ந்த புலயர் மக்களுக்கு. உயர்நிலைச் சாதியினர் என்று தங்களை பிரகடனப் படுத்திக்கொண்ட நிலவுடைமையாளர்கள் அம்மக்களை அடித்துத்துன்புறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். நாள்முழுக்க வயல்களில் விவாசய வேலைசெய்தபோதும், ஒருவேளைப் பசிக்கும் உணவுபெறமுடியாத கூலிதான் அவர்களுக்கு வழங்கப்பட்டது.பசுமை, அவர்கள் விளைவிக்கும் பயிர்களில் மட்டுமே நிறைந்திருந்தது. கிருத்துவ மிஷனரிகள் ஊருக்குள் வந்தவுடன், கூட்டங்கூட்டமாக புலயர் மக்கள் கிருத்து மதத்தைத் தழுவினர். அவர்களில் ராஜம்மா குடும்பமும் ஒன்று. அப்படியாக ராஜம்மா என்கிற ரோசம்மாவாகிற்று. அவருடைய தந்தை அவ்வூரிலிருக்கும் தேவாலயத்தில் சமையல்காரராக பணிபுரியத்துவங்கினார். கிருத்து மதத்தில் சேர்ந்தாலும், காலங்காலமாக தங்களது சாதிமக்கள் கைதேந்தவர்களாக இருந்த நடன, நாடகக் கலையினை விடாமல் தொடர்ந்தனர் அம்மக்கள். முறையான பயிற்சியுடன் நாட்டுப்புறப்பாடல், அருவடைப்பாடல் நிறைந்த நாடகங்களை அரங்கேற்றிவந்தனர். இவையனைத்திலும் ரோசம்மா மிகச்சிறந்து விளங்கினார். காக்கரசி நாடக்குழு மற்றும் ராஜா நாடகக்குழு ஆகிய இரண்டு பிரபலமான நாடகக் குழுக்களும் ரோசம்மா தங்களுடைய நாடகக்குழுவினில்தான் நடிக்கவேண்டுமென்று போட்டிபோடுமளவிற்கு ரோசம்மா புகழ்பெற்றார். சுற்றுவட்டாரத்தில் ரோசம்மா ஒரு நல்ல நடிகையாக பிரபலமடைந்தார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: