இளநெஞ்சே வா...: Ilanenjee vaa (Romantic Thriller) - Kamali Maduraiveeran
Автор: Free Audiobooks
Загружено: 2025-11-14
Просмотров: 207
Listen to this audiobook in full for free on
https://hotaudiobook.com
Title: இளநெஞ்சே வா...: Ilanenjee vaa (Romantic Thriller)
Author: Kamali Maduraiveeran
Narrator: Kamali Maduraiveeran
Format: Unabridged
Length: 7:52:18
Language: Tamil
Release date: 12-08-2024
Publisher: INAudio
Genres: Science Fiction & Fantasy, Romance, Contemporary, Romantasy
Summary:
மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். 'அவளை வெளிய கூட்டி வா...', என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது.....
பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான்.
அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. 'நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?' என்றான்.
மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது.
'அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move' என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்...
ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை....
பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான்.
அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. 'இறங்கி வா...' என்றான்.
மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: