குழந்தை இல்லாதவர்களுக்கு ஜெபம்
Автор: Agape Tv
Загружено: 2019-09-27
Просмотров: 20761
விசுவாசத்துடன் ஜெபியுங்கள்🙏
பரலோக பிதாவாகிய தேவனே உமக்கு ஸ்தோத்திரம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம்.
பரிசுத்த ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம்.
இயேசு அப்பா அந்த கல்வாரி சிலுவையிலே... என் சாபமான வாழ்க்கையை மாற்றி.. நான் ஆசீர்வாதமாய் வாழ வழி செய்துவிட்டீர் என்று விசுவாசிக்கிறேன்
தகப்பனே.. வேதத்தில் வயது சென்ற ஆபிரகாமுக்கு சரிரம் செத்துப்போய் இருந்தும்... சாராளுக்கு பெண்களின் வழிபாடு நின்று போயிருந்தும்.. தகப்பனே அவர்களுக்கு ஈசாக்கு என்ற ஆண் மகனைக் கொடுத்து வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினீர். இன்றும் வாக்குப் பண்ணினவர் நீர் உண்மையுள்ளவர் என்பதை முழு நிச்சயமாய் நான் நம்பி ஜெபிக்கிறேன் தகப்பனே..
எனக்கும் ஒரு குழந்தையைக் கொடுத்து என்னை ஆசீர்வதியும்.. மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலேயே குடியிருக்கப் பண்ணுகிறார் என்று வேதத்தில் எழுதி இருக்கிறது. இந்த வேத வார்த்தையை நான் நம்புகிறேன் இயேசு அப்பா.
உம்முடைய வார்த்தையின்படியே என் கர்ப்பப்பையில் ஒரு குட்டி பிள்ளை சுமக்கும் பாக்கியத்தை நீர் தருவீராக.. என் கர்ப்பத்தை நீர் ஆசீர்வதிப்பீராக.. கர்த்தாவே நீர் தரும் பிள்ளையை உம்முடைய சித்தத்தின் படி வளர்க்க என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.
கர்த்தாவே என் உச்சதலையிலிருந்து உள்ளங்கால் வரை சுகமும் ஆரோக்கியமும் என் சரீரத்தில் தங்கியிருக்கட்டும்.
கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன்.. ஜீவனுள்ள பிதாவே.. ஆமென்.🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: