கிறித்துவ மக்களின் நலனை பாதுகாத்திட தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை வேப்
Автор: Empire Media
Загружено: 2025-11-13
Просмотров: 799
கிறித்துவ மக்களின் நலனை பாதுகாத்திட தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை வேப்பேரி டவுட்டன் ஒய்.எம். சி.ஏ.வில் கோரிக்கை பொதுக்குழு கூட்டம் ஏ.ஐ.சி.சி சியின் தலைவர் பிஷப் டாக்டர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தின் மூலம் முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் பல்வேறு முக்கிய கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது
மேலும் ஏ.ஐ.சி.சி சி.யின் துணை தலைவராக கிங்ஸ்லி மோகன்தாஸ் பொறுப்பேற்றுக்கொண்டார் மேலும் இந்த கோரிக்கை பொதுக்குழு கூட்டத்திற்கு மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டத்திலிருந்து பேராயர்கள் மாநகரங்கள் மற்றும் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
இந்த கோரிக்கை பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு உரையாற்றியதாவது
கிறித்துவர்களின் நலனில் முழு அர்ப்பணிப்புடன் தமிழக அரசு செயல்படுகிறது தமிழகத்தில் சமத்துவமான ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அதேபோல் ஜாதி மத வேறுபாடின்றி மக்கள் நலனுக்காகவே முதல்வர் செயல்படுகிறார் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பிஷப் டாக்டர் மோகன்தாஸ் கூறியது கிறித்துவ மக்களின் நலன் காக்க தான் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் மேலும் வருகின்ற ஜனவரி மாதம் மிகப்பெரிய மாநாடு நடைபெறுகிறது என்றும் இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது மேலும் தமிழக முதல்வர் கிறிஸ்தவர்களுக்கான கல்லறை தோட்டம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதேபோல் கிறிஸ்தவர்களுக்கான தனி வாரியம் அமைக்க வேண்டும் தற்போது கிறித்துவர்களின் வாக்கு சதவீதம் 18 ஆக அமைந்துள்ளது அதன் அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு என இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் குறிப்பாக சட்டமன்ற நாடாளுமன்றம் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: