Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

மயில்ரங்கம் மயூரநாதர் கோயில் | அகத்தியர் விஜயத்தில் கூறிய வாராஹ விநாயகர் வழிபாட்டு முறை

Автор: ஆன்மீகத்துடன் நட்பு

Загружено: 2024-12-02

Просмотров: 9289

Описание:

இழந்த பதவி மீண்டும் கிடைக்க வழிபட வேண்டிய மயில்ரெங்கம் மங்களாம்பிகை உடனுறை மயூரநாதசுவாமி கோயில்

மூலவர்: மயூரநாதர்
அம்பாள்: மங்களாம்பிகை
தலவிருட்சம்: வில்வம்
ஊர்: மயில்ரெங்கம்
மாவட்டம்: திருச்சி

#வராஹ_விநாயகர்

எம்பெருமானின் திருவடிகளைக் காண்பதற்காக விஷ்ணு மூர்த்தி வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து சென்றார் அல்லவா? அவ்வாறு பூமியைத் தோண்ட ஆரம்பித்த வராக மூர்த்தி எத்தனை முயற்சி செய்தாலும் கடுகளவு பூமியைக் கூட தன்னுடைய கூரிய பற்களால் பெயர்க்க முடியவில்லை. வராஹர் என்னதான் முயற்சி செய்தாலும் பூமியைப் பெயர்க்க முடியாமல் போனது மட்டுமல்லாமல் பூமிக்கு அடியில் என்ன இருக்கிறது என்ற சூட்சும விஷயமும் தெரியவில்லை பெருமானுக்கு. அப்போது அசரீரி ஒலித்தது, “வராக மூர்த்தியே, எந்த காரியமாக இருந்தாலும் முழு முதற் கடவுளை வணங்கித்தானே ஆரம்பிக்க வேண்டும்,“. அதைக் கேட்ட வராகப் பெருமாள் தன்னுடைய தவறை உணர்ந்து விநாயக மூர்த்தியைத் தொழுதார். அப்போது விஷ்ணு மூர்த்திக்கு காட்சி கொடுத்து அனுகிரகம் அளித்தவரே மயில்ரங்கம் தலத்தில் உறையும் ஸ்ரீவராக விநாயக மூர்த்தி ஆவார். ஸ்ரீவராக விநாயக மூர்த்தியின் திவ்ய தரிசனத்தால் தன்னுடைய பற்களில் அற்புத பலம் பெருகுவதை உணர்ந்த பெருமாள் வேகமாகப் பூண்டியைத் தோண்ட ஆரம்பித்தார். அது மட்டுமல்லாமல் பூமியைத் தோண்ட தோண்ட பூமியின் அடித்தளத்திலிருந்து ஓர் அற்புத ஜோதி வெளிப்படுவதையும் உணர்ந்தார். அதுவே அண்ணாமலை பூரண ஜோதி என்பதை பின்னரே உணர்ந்து கொண்டார் விஷ்ணு மூர்த்தி.

#அகத்தியர்_விஜயத்தில்_கூறிய_வராஹ_விநாயகர்_வழிபாடு_செய்யும்_முறை

இந்த தலத்தில் அருளும் வராஹ விநாயகருக்கு என ஒரு சிறப்பான வழிபாட்டை சித்தர்கள் நமக்கு எடுத்துரைக்கிறார்கள். அந்த சிறப்பான வழிபாட்டிற்கு பெயர்தான் கரதள சுரகல வழிபாடு. அகத்தியர் விஜயத்தில் கூறியுள்ளபடி மயில் ரங்கத்தில் அருள் பாலிக்கக் கூடிய வராஹ விநாயகருக்கு என உள்ள இந்த சிறப்பான வழிபாடானது நமது எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் சக்தி உடையது. கர தளம் என்றால் உள்ளங்கை தாமரை. சுர கலம் என்றால் மண் அகலில் ஊற்றிய பசு நெய். எனவே கரதள சுரகல வழிபாடு என்பது மண் அகலில் பசு நெய்யை ஊற்றி அதை விரித்த உள்ளங்கையில் தாங்கியவாறே ஸ்ரீவராக விநாயகரை வலம் வந்து வணங்குவதாகும். நெய் மட்டும் ஊற்றிய அகல் விளக்கை கையில் தாங்கி விநாயகரை அடிப் பிரதட்சிணமாக வலம் வந்து வணங்கி பின்னர் அந்த தீபத்தை விநாயகருக்கு ஏற்றி வழிபடலாம். ஒவ்வொரு பிரதட்சிணத்திற்கும் ஒரு அகல் தீபத்தை ஏற்றிக் கொள்ளவும். இடது உள்ளங்கை மேல் ஒரு சிறு பருத்தி துணி அல்லது தாமரை இலை அல்லது பூவரசு இலையை வைத்து அதன் மேல் அகல் தாங்கிய வலது கையை வைத்து வலம் வரவும். திருத்தலமாகும்

மூல மூர்த்தியான ஸ்ரீமயூரநாதருக்கும் ஸ்ரீவராக விநாயக மூர்த்திக்கும் இடையே அமர்ந்து அருள் பாலிக்கிறார் ஸ்ரீவிஸ்வ சந்தான வேத மூர்த்தி. பொதுவாக வலது காலின் மேல் இடது காலை வைத்த நிலையில் முயலகனுடைய கோலம் இருக்கும். இங்கு இடது காலின் மேல் வலது காலை வைத்தவாறு முயலகனின் தோற்றம் அமைந்துள்ளது. இத்தகைய மூர்த்திகளை வழிபடுவதால் கணவன்மார்களுக்கு தங்களுடைய இறுதிக் காலம் வரை மனைவியினுடைய அன்பும் ஆதரவும் இருக்கும்

தலவரலாறு

முருகனோட வாகனம் மயில் முருகப்பெருமான் அழகாக இருப்பதற்கு மயிலான நாம் தான் காரணம் என்று மயிலுக்கு கர்வம் ஏற்பட்டது இதனை கவனித்த முருகப்பெருமான் மயிலின் அகண்டையை நீக்க முடிவு செய்து அந்த மயிலுக்கு சாபம் வழங்கினார் உன் பொலிவு அனைத்தையும் இழப்பாய் என்று முருகப்பெருமானிடம் இருந்து சாபம் பெற்ற மயில் உடனடியாக தனது அழகிய தோகை அனைத்தையும் இழந்து ஒரு சாதாரண கோழி போன்ற உருமாறி இந்த தலத்தில் வந்து விழுந்தது. சாபம் பெற்ற மயில் இந்த தலத்தில் உள்ள வராஹ விநாயகரையும் மயூரநாதனையும் வழிபாடு செய்து தன் அகந்தை நீங்க பெற்று மீண்டும் முருகப் பெருமானின் வாகனமாக மயில் இடம்பெற்ற தலமாக மயில் ரெங்கம் மயூரநாதர் ஆலயம் உள்ளது. ரங்கம், அரங்கம் என்றால் பிரத்யேகமான, சிறப்பான என்று பொருள். விளையாட்டு அரங்கம் என்றால் விளையாடுவதற்காகவே சிறப்பாக அமைக்கப்பட்ட இடம் என்று பொருள். அதுபோல் மயில்ரங்கம் என்றால் மயில் வாகனம் தன்னுடைய அகம்பாவம் நீங்கி நிரந்தரமாக முருகப் பெருமானின் வாகனமாக அமையும் சிறப்பைப் பெற்ற திருத்தலம் என்று பொருளாகும்

பிராத்தனை

இழந்த பதவி மீண்டும் கிடைக்க இந்த தலத்தில் உள்ள வராஹ விநாயகரை வழிபாடு செய்யலாம். மேலும் இந்த தலத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தியை வழிபாடு செய்யும் பொழுது நாம் பெற்ற பிள்ளைகள் நம் வாழ்நாள் முழுவதும் நம்மை பேணி பாதுகாக்கும் பாக்கியம் நமக்கு கிடைக்கும். மேலும் இந்த தலத்தில் உள்ள காசி விஸ்வநாதருக்கு பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு சம அளவு எடுத்து அதை பொடி செய்து பசும் பாலில் கலந்து சாமிக்கு நெய்வேத்தியம் செய்து ஆலயம் வரக்கூடிய பக்தர்களுக்கு வழங்கினால் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் அன்பர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும் நாக தோஷம் நிவர்த்தியாகும்.

அமைவிடம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து திருமணமேடு, பச்சாம் பேட்டை, இடையாற்றுமங்கலம் வழியாக லால்குடி செல்லும் நகர பேருந்தில் பயணம் செய்து மயில்ரெங்கம் மயூரநாதர் கோயில் அடையலாம்.

நன்றி அகஸ்தியர் விஜயம்

கோயில் Google Map Link

https://maps.app.goo.gl/9XqrrCNGfgYhq...

ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்

+91 6379756193

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்

7994347966

if you want to support our channel via UPI Id

nava2904@kvb

இந்த தலத்தின் முழு வரலாறு தெரிந்து கொள்ள கீழ் உள்ள Facebook Link யை கிளிக் செய்யவும்

  / 1bbcqfsyok  

Join Our Channel WhatsApp Group

https://chat.whatsapp.com/LRPxBQMNHRA...

Join this channel to get access to perks:

   / @mathinam2301  

தமிழ்

மயில்ரங்கம் மயூரநாதர் கோயில் | அகத்தியர் விஜயத்தில் கூறிய வாராஹ விநாயகர் வழிபாட்டு முறை

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

சனிபகவான் தினமும் வழிபடும் ஆதிகுடி அங்குரேஸ்வரர் கோயில் உடல் குறைபாடுகள் நீங்க வழிபட வேண்டிய தலம்

சனிபகவான் தினமும் வழிபடும் ஆதிகுடி அங்குரேஸ்வரர் கோயில் உடல் குறைபாடுகள் நீங்க வழிபட வேண்டிய தலம்

எல்லா பிரச்சினைகளுக்கும் எளிய தீர்வு | Mahha Dan Shekar Raajha | Astrological Remedy for Insomnia

எல்லா பிரச்சினைகளுக்கும் எளிய தீர்வு | Mahha Dan Shekar Raajha | Astrological Remedy for Insomnia

2026 தங்கத்தில் முதலீடு செய்யலாமா?  புது வருடம் நமக்கு வரமா??  - ஜீவநாடி ஜோதிடர் பாபு

2026 தங்கத்தில் முதலீடு செய்யலாமா? புது வருடம் நமக்கு வரமா?? - ஜீவநாடி ஜோதிடர் பாபு

திடீரென அர்ச்சகருக்கு காட்சி கொடுத்து அதிர வைத்த சிவன் |  Avalivanallur Sri Satchinathar Shiva

திடீரென அர்ச்சகருக்கு காட்சி கொடுத்து அதிர வைத்த சிவன் | Avalivanallur Sri Satchinathar Shiva

பிரசாதம்#தீராத பிணி தீரும்#சூரியன்வழிபட்ட#கிளி குரல் #பக்தையின் கனவில் லலிதா#ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு

பிரசாதம்#தீராத பிணி தீரும்#சூரியன்வழிபட்ட#கிளி குரல் #பக்தையின் கனவில் லலிதா#ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு

இஞ்சிக்குடி பார்வதீஸ்வரர் கோயில் | வாஸ்து தோஷம் நீக்கும் வாராஹி | நவக்கிரக தோஷ நிவர்த்தி தலம்

இஞ்சிக்குடி பார்வதீஸ்வரர் கோயில் | வாஸ்து தோஷம் நீக்கும் வாராஹி | நவக்கிரக தோஷ நிவர்த்தி தலம்

3000 ஆண்டுகளாக மூச்சுக்காற்றை வெளிப்படுத்தும் சித்தரின் ஜீவசமாதி !

3000 ஆண்டுகளாக மூச்சுக்காற்றை வெளிப்படுத்தும் சித்தரின் ஜீவசமாதி !

எதிரியின் பலத்தை தூள் தூளாக்கும் வாலி வழிபட்ட வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் | தமிழகம் மறந்த அற்புத கோயில்

எதிரியின் பலத்தை தூள் தூளாக்கும் வாலி வழிபட்ட வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் | தமிழகம் மறந்த அற்புத கோயில்

புத்தாண்டு ராசி பலன் 2026  | Tamil New Year Rasi Palan | Suryan FM

புத்தாண்டு ராசி பலன் 2026 | Tamil New Year Rasi Palan | Suryan FM

மாங்கல்ய தோஷத்தை நீக்கி மாங்கல்ய பலம் அருளும் இடையாற்றுமங்கலம் மாங்கல்யேஸ்வரர் உத்திர நட்சத்திர தலம்

மாங்கல்ய தோஷத்தை நீக்கி மாங்கல்ய பலம் அருளும் இடையாற்றுமங்கலம் மாங்கல்யேஸ்வரர் உத்திர நட்சத்திர தலம்

வேல் மாறல் பூஜை (பெங்களூரில் நடைபெற்றது) Part -1. #எல்லாம்சாய்செயல்

வேல் மாறல் பூஜை (பெங்களூரில் நடைபெற்றது) Part -1. #எல்லாம்சாய்செயல்

சந்திராஷ்டம நாளில் ஏற்படும் இன்னல்களை நீக்கும் பெருமகளூர் சோமநாதர் கோயில் மகாலட்சுமி 🌙 வழிபட்ட தலம்

சந்திராஷ்டம நாளில் ஏற்படும் இன்னல்களை நீக்கும் பெருமகளூர் சோமநாதர் கோயில் மகாலட்சுமி 🌙 வழிபட்ட தலம்

7 ஜென்ம பாவ நிவர்த்தி | சோமநாத சுவாமி கோவிலின் முழு வரலாறு#achudamangalam #temple  #somanathaswami

7 ஜென்ம பாவ நிவர்த்தி | சோமநாத சுவாமி கோவிலின் முழு வரலாறு#achudamangalam #temple #somanathaswami

கேட்டை நட்சத்திர தலம் பசுபதி கோயில் வரதராஜப் பெருமாள் கோயில்

கேட்டை நட்சத்திர தலம் பசுபதி கோயில் வரதராஜப் பெருமாள் கோயில்

நிரந்தர வேலை கிடைக்க அருளும் 7000 ஆண்டு பழமையான தலையெழுத்தை திருத்தி அமைக்கும் திருத்தலையூர் ஈஸ்வரன்

நிரந்தர வேலை கிடைக்க அருளும் 7000 ஆண்டு பழமையான தலையெழுத்தை திருத்தி அமைக்கும் திருத்தலையூர் ஈஸ்வரன்

சிவன் சொல்வது இதுதான் | உன் வாழ்க்கை இன்றே மாறும்  | sivan motivational speech Tamil

சிவன் சொல்வது இதுதான் | உன் வாழ்க்கை இன்றே மாறும் | sivan motivational speech Tamil

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் வரலாறு | Mannargudi Rajagopalaswamy Temple History in Tamil

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் வரலாறு | Mannargudi Rajagopalaswamy Temple History in Tamil

கொஞ்சமாவது புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த கோவிலுக்கு வரமுடியும் Nannilam Madhuvaneswarar

கொஞ்சமாவது புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த கோவிலுக்கு வரமுடியும் Nannilam Madhuvaneswarar

பிரபலங்கள் வழிபடும் வரமுக்தீஸ்வரர் கோயில் - ஒரு முறை சென்றாலே பலன் | Shivatemple | Varamuktheeswarar

பிரபலங்கள் வழிபடும் வரமுக்தீஸ்வரர் கோயில் - ஒரு முறை சென்றாலே பலன் | Shivatemple | Varamuktheeswarar

Kumbam -கொஞ்சம் சிரமப்பட்டால் நல்ல பலன் கிடைக்கும் எழுதி வச்சுக்கோங்க உங்கள் வாழ்க்கையே மாறப்போகுது!

Kumbam -கொஞ்சம் சிரமப்பட்டால் நல்ல பலன் கிடைக்கும் எழுதி வச்சுக்கோங்க உங்கள் வாழ்க்கையே மாறப்போகுது!

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]