பாதாள செம்பு முருகன் கோவில்| Padala Sembu Murugan Temple|கருங்காலி மாலை | Munpani Media
Автор: MUNPANI MEDIA
Загружено: 2023-11-11
Просмотров: 2723
#பாதாள செம்பு முருகன் கோவில்
#Padala Sembu Murugan Temple
#கருங்காலிமாலை
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே, ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் கருவறை, பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. அதில் 17 அடிக்கு 21 அடி என்ற அளவில் முருகன் சன்னிதி அமைந்திருக்கிறது.
கோவில் அமைவிடம்
திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் வழியில் ரெட்டியார்சத்திரம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து ஸ்ரீராமபுரம் செல்லும் சாலையில், 3 கிலோமீட்டர் பயணித்தால் ராமலிங்கம்பட்டி போகர்நகரில் உள்ள பாதாள செம்பு முருகன் கோவிலை சென்றடையலாம். இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் கோவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: