வைகாசித் திங்கள் நிறைமதி வெளியீட்டில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உரை
Автор: தென்னாடு - Thennadu
Загружено: 2025-06-13
Просмотров: 182
தென்னாடு 58 வது இதழ் வெளியீடு
மேழ விழுகம்ப ஊழி ஆண்டு 2299 விடை நல்லோரை வைகாசித் திங்கள் 27ம் நாள் நிறைமதி அன்று (10-06-2025 திங்கட்கிழமை) ஐம்பத்து எட்டாவது தென்னாடு திங்கள் செய்தியிதழ் வெளியீடு நிறைமதி வழிபாட்டுடன் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். சிவக்கொழுந்து சிறிசற்குணராசா அவர்கள், வலம்புரி பத்திரிகை தலைமை ஆசிரியர் சிவத்திரு. நல்லையா விஜயசுந்தரம் அவர்கள், இந்து சமய கலாசார அமைச்சின் முன்னாள் துணை இயங்குனர் இந்து சமய கலாசார அமைச்சு சிவத்திரு. முத்தையா சின்னத்தம்பி சிறி தயாளன் அவர்கள், கோண்டாவில் இந்துக் கல்லூரியின் அதிபர் சிவத்திரு. நடேசு தயாளன் அவர்கள், தற்போது பணி உயர்வு பெற்றுள்ள கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் அதிபர் திருமதி. கவின்யா நவஜீவா அவர்கள் மற்றும் அடியார்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர். சிவக்கொழுந்து சிறிசற்குணராசா ஐயா அவர்கள் சிவத்திரு. நல்லையா விஜயசுந்தரம் அவர்களுக்கு முதல் இதழினை வழங்கி, தென்னாட்டின் ஐம்பத்து எட்டாவது திங்கள் இதழை வெளியிட்டு வைத்திருந்தார். தொடர்ந்து ஏனையோர்களுக்கு இதழ் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் இலங்கை அதிபர் சேவையில் ஒன்பது ஆண்டுகள் பணிசெய்து, தற்போது கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை அதிபராக பணியாற்றி பணி உயர்வு பெற்றுள்ள திருமதி. கவின்யா நவஜீவா அவர்களை கெளரவிக்கு நிகழ்வும் இடம்பெற்றிருந்தது. அவர்களிற்கான வாழ்த்துரையை துணைவேந்தர் பேராசிரியர். சிவக்கொழுந்து சிறிசற்குணராசா ஐயா அவர்கள் வழங்கி வைத்திருந்தார்.
திருச்சிற்றம்பலம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: