அய்யனருள் உய்ய அமுதக் குரலில் ஒரு செய்யுள்..
Автор: PENAAPPERUMOOCHU
Загружено: 2025-11-20
Просмотров: 700
பக்தர்க்கருளும் அய்யனே சரணம்
பாபவிநாசப் பரம்பொருளே சரணம்
(music)
நெஞ்சே நெஞ்சே-
சுய நலமொடு வளர்ந்த நஞ்சே -
எண்ணங்களின் பேயோடே வாழும்
இருள் நெஞ்சே...
இருளில் இடறியலையும்
ஒரு பொருளிலா நெஞ்சே!
(music)
சங்கடங்களோடே திரியும் -
சதுர்முகனின்
பொம்மைகள் யாமெல்லாம்.
பொம்மைகள் யாமெல்லாம்.
எங்கடன் தீர்த்து
இறையெனும் இன்பத்தில் திளைக்க
சந்தர்ப்பமாய் வந்த சாஸ்தாவே
சரணம் சரணம்
எம் சரணங்களின் ஆஸ்தாவே
சரணம்.
(music)
பிறவி ஐயம் அற
ஐயமின்றி அய்யனை உறு.
அவனே அணங்கு தொடாத
ஆன்ம குரு..
நவத்வாரப் பிராணிகளின்
நான் எனும் செருக்கழிக்கும்
அவதார உரு.
அவனருள் பெறு..
அவனருள் பெறு...
(music)
சங்கல்ப்பம் உறுவோரை
தன் கர்ப்பம் வைத்துப்
புறவாழ்வின்
ஐந்தவித்து எம்மை
அக வாழ்விற்குள்
ஈன்று அகந்தள்ளவே
எம்மை ஈன்று அகந்தள்ளவே
தத்வம் அசியென
தத்துவமாய் அமர்ந்த
ஹரி ஹர வித்தகமே..
சரணம்.. சரணம். சரணம்..
(music)
மூவாறு படிகளிலும்
முக்தித் தத்துவங்கள் பல நூறு
அவன் பக்திக்குள் சரண்புகுந்து
பாழ் நெஞ்சே நீ பலனுறு.
பாழ் நெஞ்சே நீ பலனுறு.
(music)
அவனவன் அரக்க உள்ளத்தில்
ஆயிரம் மகிஷமுகி.
கவனமொடு நோன்பிருந்து
கண்டு கொள் அதுவே கர்மப் பிணி
அதற்காகவே அய்யனிடம் நீ
அறு வாரமும் அடி பணி. அடிபணி..
(music)
அனைவரையும் அய்யனாய்ப்
பாவித்து நான் எனும் எல்லை விரித்து
நான் எனும் எல்லை விரித்து
எல்லா உயிரிலும் நானைக் காணவே
இந்த உள்ளங்களின் உளவாரப் பணி
உன்னை உன்னிலிருந்து விலகி
அப்பணிக்கென.அர்ப்பணி.அர்ப்பணி..
(music)
காத்திருக்கிறான் கரி மலையில்
ஹரி எனும் நாமத்தில் இளமுனி.
மனமெனும்
மகிஷ முகியைச்
சம்ஹரித்து
ஆன்ம லீலாவை அவனுள்
வெளிப்படுத்தவே
சிவ விஷ்ணு அவதாரமாய்
அந்தப் பாலகன் மணி.
பாலகன் மணி.
(music)
நான் எனும் கர்ம பாவத்தை
அவனுள் முடித்து விட்டு
அவன் அருள் எனும்
புண்ணியத்தை
நம்முள் அவிழ்த்திடவே
இந்த இருமுடித் துணி.
(music)
பற்று அறும் முடிவோடு
அவன் பதமலரிலேயே
இரு இனி.. இரு இனி.
(music)
அவன் கருணைக் குளிரோடையிலேயே
அறியாமைச் சூடு தணி. தணி.
அகம் அழகுற அய்யன் எனும்
பராபரத்தையே ஆபரணமாய்
அணி அணி..அணி..
(music)
ஐயப்பா, ஐயப்பா
அறியாமை அகழியிலிருந்து
எம்மைத் தூக்கி விடப்பா.
முக்தியே உனை நோக்கி யாம் முன்னேறுகையில்
உன் அருட்கரம் கொண்டெம்மை
யோகப் பாதையில் ஏற்றி விடப்பா...
சுவாமி சரணம்..
மு. பழனிக்குமார்..
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: