🌾"தை மகளே வருக"🌾 கவிதைக்களம்📝 புதுக்கவிதை புதன்📻 ஜெர்மன் தமிழருவி வானொலி📻
Автор: Sivagami Sundar
Загружено: 2026-01-13
Просмотров: 77
தை மகளே வா
தை பிறந்தால் வழி பிறக்கும்
தமிழர் வாழ்வில் வளம் சேர்க்கும்
போக்கும் உணவு பஞ்சத்தை
நிறைக்கும் உழவர் நெஞ்சத்தை
அருணனைப் போற்ற அரும்பிய பொங்கல்
உழுத மாட்டிற்கு உரியவன் வைக்கும் பொங்கல்
உழவுக்கு நன்றி சொல்ல உருவான பொங்கல்
உறவுகளோடு சிரித்து மகிழ சிறக்கும் பொங்கல்
இஞ்சி மஞ்சள் கரும்பு
இளவட்டம் செய்யும் குறும்பு
வாடிவாசல் தாண்டி திமிரும் காளைகள்
வீட்டு வாசல் தாண்டி துள்ளும் இளசுகள்
சுற்றமும் நட்பும் கண்டு மகிழும்
ஊரெங்கும் பரவும் தமிழர் புகழும்
மண்மனம் மாறா தமிழர் பண்பாடு
தை மகளே வருக சீரும் சிறப்போடு
ஓயாமல் உழைப்பவன்
ஓய்வின்றி உழைப்பானவன்
ஓய்வூதியம் எதிர்பார்க்காதவன்
அவனே என்றும் ஓயாதவன்
மற்றவர் வயிறை காய வைக்காதவன்
உற்றவர் உயிரை தேகத்தில் தைப்பானவன்
நித்தமும் உழுவான்
அவன்தான் உழவன்
அவன் நலன் காக்க வருக
தைமகளே திருவருள் தருக
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: