திருவானைக்காவல் கோவில் யானை HBD|Thiruvanaikaval Temple Elephant Akila Birthday Celebration |Trichy |
Автор: Open Talk Tamil
Загружено: 2022-05-25
Просмотров: 58227
#elephant
#thiruvanaikaval
#sivantemple
கோவில் யானைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மழலையர்கள்..!
திருச்சி: 24-05-2022
கோவில் யானைக்கு பிறந்தநாள் - வாழ்த்து கூறிய மழலையர்கள்..! உள்ளிட்ட பக்தர்கள்...
பழங்கள் வழங்கி வாழ்த்து கூறி கொண்டாட்டம்...
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவதும், கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்டதுமான திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது.
இவ்வாலயத்தில் சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் பாதுகாத்தது என்றும், யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது என்பது வரலாறு, அதனாலேயே திருஆனைக்கா என இத்தலம் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் யானை முக்கிய பங்காற்றுகிறது, ஒவ்வொரு கால பூஜையிலும் கோவில் யானை அகிலா மூலம் புனிதநீர் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுவது மற்றும் யானை அகிலாவும் முக்கிய பங்காற்றுகிறது.
அந்த வகையில் கடந்த 2002ல் பிறந்த அகிலா யானையானது கடந்த 2011ம் ஆண்டு மறைந்த அப்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின்போது திருக்கோவில் பூஜைகள் மற்றும் திருப்பணிக்காக திருவாணைக்காவல் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
அகிலாவிற்கு 19 வயது நிறைவுபெற்று நேற்று 20-வது வயதை எட்டும் நிலையில், திருக்கோவில் சார்பில் யானைக்கு பிறந்த நாள் விழா இன்று (24-05-2022) மாலை கொண்டாடப்பட்டது.
கோவில் யானை தங்குமிடத்தில் இருந்து யானை அகிலா எழிலுடன் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு பின்னர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலையில் யானைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு யானை பாகன்கள், அர்ச்சகர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் பங்கேற்ற யானை அகிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடி பின்னர் பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய், கொழுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி யானையை மகிழ்வித்தனர்.
யானையும் பக்தர்கள் மற்றும் பலரது வாழ்த்துக்களை சமமாக பெறும் வகையில் தும்பிக்கையை ஆட்டி தனது நன்றியை தெரிவித்தது அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது..!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: