திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் தமிழ்ப் பணிகள்
Автор: VAYALVELI THIRAIKKALAM
Загружено: 2019-01-29
Просмотров: 19874
திருபனந்தாள் காசித் திருமடம் தமிழுக்கும் சமயத்திற்கும் ஆற்றிவரும் பணிகளை இவ்வுலகறியும். இத்திருமடத்தின் பெருமைக்குரிய செந்தமிழ்க் கல்லூரியில் யான் ஐந்தாண்டுகள் தமிழ் கற்றேன்(1987-1992). இக்கல்லூரி என் வாழ்க்கை வளம்பெறுவதற்கும், தமிழறிவு பெறுவதற்கும் அடித்தளம் அமைத்து உதவியது.
பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்தின் படப்பிடிப்பிற்காகத் தஞ்சை மாவட்டத்தில் அலைந்து திரிந்து, ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த பொழுது, திருப்பனந்தாள் மடத்திற்குச் சென்று, தவத்திரு "கயிலை மாமுனிவர்" முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்களிடமும், இவ்வுலக வாழ்வினை நிறைவுசெய்த தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் அவர்களிடமும் வாழ்த்தினைப் பெற்றோம். அப்பொழுது ஒளி ஓவியர் ந.ஆ. சிவக்குமார் அவர்கள் எங்கள் சந்திப்பைப் பயனுடைய வகையில் ஒளிப்பதிவில் பதிந்து வழங்கினார். காலம் கடந்து வரலாறு சொல்லும் இப்பதிவைத் தமிழுலகிற்கு வழங்குவதில் நிறைவான மகிழ்ச்சியுறுகின்றேன். எங்களின் களஞ்சியத்தின் சேமிப்பிலிருந்து சற்றொப்ப ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இவ்வொளிப்பதிவு வெளிவருகின்றது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: