30 விடுகதைகள்
Автор: kanaa kids
Загружено: 2025-04-25
Просмотров: 5128
சிறுவர்களுக்கு பல அசத்தலான காமிக்ஸ் புத்தகங்கள் இங்கே விற்பனைக்கு உள்ளன! இந்த கோடை விடுமுறையில், உங்கள் குட்டீஸ்களுக்கு காமிக்ஸ் மகிழ்ச்சியை தந்து பாருங்களேன்.. entertainment + knowledge!
https://ocomics.com/af/2/
30 விடுகதைகள் மற்றும் அதன் பதில்கள் படங்களுடன்...
எல்லோரும் கொண்டாடும் விடுமுறையை அறிவு தேடலுடன் கொண்டாடுங்கள் ...பதிலை யூகியுங்கள்...
விடுகதைகள் பகுதி -37 (RIDDLES 37)
1. கிளை இல்லாத சவுக்கு மரம், வெட்ட வெட்ட வளருது. அது என்ன?
2. குட்டை மரத்தில் கொட்டாப்புள்ளி . அது என்ன?
3. குடிக்க தண்ணீர் உண்டு, குளிக்க தண்ணீர் இல்லை. அது என்ன?
4. குடியிருக்க கோட்டை கட்டும், கோட்டையை உடைத்து வெளியே வரும் .அது என்ன?
5. குண்டு முத்தம் குண்டு முத்தம் குதிச்சு விளையாட வங்காளத்து ராசா வந்து மறைச்சுகிட்டாராம் .அது என்ன?
6. குதி குதித்தால், பல் இளித்தாள். அவள் யார்?
7. குண்டு முழி ராஜாவுக்கு, குடல் எல்லாம் பல். அது என்ன?
8. குண்டான கோழிக்கு, குடலுக்குள் சலங்கை. அது என்ன?
9. கை இரண்டையும் ஆட வைக்கும், கந்தலெல்லாம் கூட்டி வைக்கும். அது என்ன?
10.கையில்லாமல் நீந்துவான், கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?
11. கைக்குள் அடங்குவான்,கண்ணைச் சிமிட்டுவான் .அவன் யார் ?
12. கையில் கரணம் போடும் கணக்குப்பிள்ளை .அது என்ன ?
13. கையில் தவழும், பையில் உறங்கும். அது என்ன?
14. கையிலே அடங்கும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை. அது என்ன?
15. கொம்பு காளை இறங்கி வருது, பிடிக்க போனால் கொம்பை காணும். அது என்ன?
16. கொள்ளையிலே சோறு ஆக்கி வைத்தேன். காக்காய் தின்ன வில்லை, கழுகும் திண்ணவில்லை. அது என்ன?
17. கோடையிலே ஆடிவரும், வாடையிலே முடங்கிவிடும் .அது என்ன?
18. கோணல் எத்தனை இருந்தாலும் ,குணமும் குரியும் மாறாது. அது என்ன?
19. சங்கீதம் பாடும், ரத்தம் குடிக்கும். அது என்ன?
20. சட்டையை கழட்டியதும், சடக்கென்று உள்ளே விழும். அது என்ன?
21.சலசலவென்று சத்தம் போடும், பேச மட்டும் வராது .அது என்ன?
22. ஜான் உயர பூனை, வைத்ததெல்லாம் சுமக்கும். அது என்ன?
23. சிங்கார மண்டபத்திலே சங்கீதக் கச்சேரி, அங்கே போனால் அடியும் , கொட்டும் தப்பாது. அது என்ன?
24. சித்திரப் பின்னல் கோட்டைக்குள்ளே போக வழி உண்டு ,வர வழி இல்லை. அது என்ன?
25. சிரிக்காமல் கிடப்பான் காட்டுக்குள்ளே, சிரித்தபின் வருவான் வீட்டுக்குள்ளே. அவன் யார் ?
26. சிவப்பு மொச்சைக்கொட்டை, பகட்டும் பட்டு சட்டை. அது என்ன?
27. சின்னச்சின்ன கத்தி சிங்கார கத்தி, துரைமாரை கண்டாலும் விலகாத கத்தி .அது என்ன?
28. சின்னப் பொடியனுக்கு, அரண்மனையிலேயே வேலை அது என்ன?
29. சுத்தி சூர முள்ளு, நடுப்புற நல்ல வெல்லம். அது என்ன?
30. சுமையும் சுமந்திருக்கும், அடியும் சுமந்திருக்கும். அது என்ன?
இன்னும் சில காணொளிகள்
• 30 தமிழ் விடுகதைகள் (தொகுப்பு-33) @kanaaki...
• தமிழ் விடுகதைகள் பகுதி 29 |#quiz|TAMIL RID...
• 30 விடுகதைகள்(தொகுப்பு - 24)#riddles in #t...
• WHO AM I | நான் யார் - 6 | RIDDLE with 3 ...
• Picture riddles in Tamil | Find the odd se...
Subscribe kanaakids
http://www.youtube.com/c/kanaakids?su...
/ kanaa-kids
https://www.facebook.com/profile.php?...
#trending #riddlejourney #generalknowledge #quiz #riddles #gk #gkquiz #விடுகதைகள் #விடுகதை #viralvideo #mindbendingquiz #riddleoftheday #riddlechallenge #riddler #தமிழ் #தமிழ்விடுகதை
#tamilriddles #google #மூளைக்குவேலை #30Vidukathaigal #quizgames #quiz #wordriddles #tamilvidukathai
#riddleswithanswers
#30தமிழ்விடுகதைதொகுப்பு
#VidukathaiInTamilWithAnswerAndPictures
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: