உருகிய நெஞ்சம்
Автор: Sandhana Creations
Загружено: 2025-12-03
Просмотров: 432
கீழ்த்திசை நாடுகளின் அப்போஸ்தலர் & மறை பரப்பு நாடுகளின் பாதுகாவலர் புனித பிரான்சிஸ் சவேரியார் பணிகளைப் பாராட்டி புகழும் பாடல்.
பா: அருள் தந்தை முனைவர் சி. மணி வளன் சே.ச.
உருகிய நெஞ்சம் தன்னில்
உணர்வுகள் பொங்கி எழ
நெருங்கியே மறைப்பணியில்
நிலைத்தவரே சவேரியாரே!
உருகிய நெஞ்சம் தன்னில்
உணர்வுகள் பொங்கி எழ
நெருங்கியே மறைப்பணியில்
நிலைத்தவரே சவேரியாரே!
அருமையாய்த் தவங்கள் பல
அகத்தினுள் ஏற்று நாளும்
பெரும் புனிதராக எம்மில்
பேரிடம் பெற்றவர் நீர்.
பெரும் புனிதர் பிரான்சிஸ் சவேரியார்
உம் பணி பாடிப் புகழ்வோம்.
பெரும் புனிதர் பிரான்சிஸ் சவேரியார்
உம் பணி பாடிப் புகழ்வோம்.
குறை உள்ள மனிதனே நீ
கொண்டு போவது ஒன்றும் இல்லை.
குறை உள்ள மனிதனே நீ
கொண்டு போவது ஒன்றும் இல்லை.
இறைவழி துணிந்து தேடினால்
இதயம் நிம்மதி காணும் என
இறைவழி துணிந்து தேடினால்
இதயம் நிம்மதி காணும் என
வரையற்ற அன்பிலே தான்
வள்ளலாய்ப் புதுமைகள் செய்தீர்.
நிறைவளிக்கும் இறையன்பில்
நிலைத்திடப் போதனை தந்தீர்.
பெரும் புனிதர் பிரான்சிஸ் சவேரியார்
உம் பணி பாடிப் புகழ்வோம்.
பெரும் புனிதர் பிரான்சிஸ் சவேரியார்
உம் பணி பாடிப் புகழ்வோம்.
பேரிடர் என்று இல்லை.
பட்டினியால் கவலை இல்லை.
பேரிடர் என்று இல்லை.
பட்டினியால் கவலை இல்லை.
மானிடர் என்றும் எங்கும்
மாபரன் வழியில் செல்ல
மானிடர் என்றும் எங்கும்
மாபரன் வழியில் செல்ல
ஊனிடைத் துன்பம் ஏற்றீரே
ஊர் ஊராய்ப் போதித்தீரே.
கானிடைத் தவித்த போதும்
கடவுளின் வழி நின்றீரே!
பெரும் புனிதர் பிரான்சிஸ் சவேரியார்
உம் பணி பாடிப் புகழ்வோம்.
பெரும் புனிதர் Francis சவேரியார்
உம் பணி பாடிப் புகழ்வோம்.
உருகிய நெஞ்சம் தன்னில்
உணர்வுகள் பொங்கி எழ
நெருங்கியே மறைப்பணியில்
நிலைத்தவரே சவேரியாரே!
அருமையாய்த் தவங்கள் பல
அகத்தினுள் ஏற்று நாளும்
பெரும் புனிதராக எம்மில்
பேரிடம் பெற்றவர் நீர்.
பெரும் புனிதர் பிரான்சிஸ் சவேரியார்
உம் பணி பாடிப் புகழ்வோம்.
பெரும் புனிதர் பிரான்சிஸ் சவேரியார்
உம் பணி பாடிப் புகழ்வோம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: