திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலய கார்த்திகை தீபத்திருவிழா! பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா!
Автор: Shalini TV Updates
Загружено: 2025-11-24
Просмотров: 780
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலய கார்த்திகை தீபத்திருவிழா முதல் நாள் விழாவில் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயத்தில் கார்த்திகை மாதத்தில் பத்துநாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதை தொடர்ந்து முதல் நாள் இரவு திருவிழாவில் பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்று
அண்ணாமலையார் பெரிய வெள்ளி அதிகார நந்தி வாகனத்திலும், பராசக்தி அம்மன் ஹம்ச வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சிறிய அதிகார நந்தி வாகனத்திலும் நான்கு மாடவீதிகளை சுற்றி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: