Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

திருச்செந்தூர் கொடிமரத்தின் காவலுக்கு மாயாண்டி சுடலை மாடன் வந்த கதை

Автор: Namma Ooru Perumai

Загружено: 2025-03-14

Просмотров: 87334

Описание:

திருச்செந்தூர் கோவிலுக்கு கொடிமரம் வந்த வரலாறு...

முன்னொரு காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொடிமரம் இல்லாத காரணத்தினால் மாசி திருவிழா நடைபெறவில்லை...

ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கொடிமரம் வைக்க வேண்டுமென்று ஊர் கூடி பேசி முடிவெடுத்தனர்...

உடனே ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு காக்காச்சி மலைக்கு (மேற்கு தொடர்ச்சி மலை) கொடி மரம் வெட்ட கிளம்பினர்...

திருச்செந்தூரில் மந்தை அருகே உள்ள அம்மன் கோயிலுக்கு அந்தக் குழுவினர் வேண்டச் சென்றனர்...

அம்மன் கோயில் முன்பு மற்றவர்கள் நின்று கொண்டனர்...

அம்மனை வணங்க ஆறுமுகம் ஆசாரி மட்டும் கருவறைக்குள் நுழைந்து அம்மனை வணங்கினார்...

அப்போது அம்மன் கண்களில் இருந்து நீர் வழிந்தது...

பயந்து போய் படபடத்து போன ஆசாரி, அம்மனே! ஏன் இந்த நிலை. தங்கள் கண்களில் நீர் வழிய காரணம் தான் என்ன? என்று கேட்டார்...

அம்மன் 'மகனே நீங்கள் செய்யும் பணி நல்ல பணி தான். ஆனால் அந்த பணியில் ஈடுபடும்

உன்னை தவிர வேறு யாரும் உயிரோடு திரும்ப மாட்டார்கள். அதை நினைத்து தான் எனக்கு வருத்தமாக உள்ளது...

இதை நீ அவர்களிடம் சொல்லிவிடாதே. இது ஆண்டவன் கட்டளை...

இந்த நிலை தெரிந்த காரணத்தினால் தான் என் கண்களில் கண்ணீர் வந்தது' என்று கூறினாள்...

உடனே அதிர்ந்து போன ஆறுமுகம் ஆசாரி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்...

இதை வெளியே உள்ளவர்களிடமும் சொல்லக்கூடாது...

சொன்னால் தெய்வக்குத்தமாக விடும்,அதே நேரம் நம்பி நம்மோடு வருபவர்களை காப்பாற்ற வேண்டும்.என்ன செய்யலாம் என்று குழம்பினார்...

ஆயினும் கலங்காமல் முருகன் மீது பாரத்தை போட்டு விட்டு களக்காடு அருகே உள்ள ஏர்வாடிக்கு வந்தார்...

அங்கு சின்னதம்பி மரக்காயர் என்ற மந்திரவாதி ஒருவரை சந்தித்தார்...

அவரிடம் முருகப் பெருமானுக்கு கொடிமரம் வெட்ட வந்த கதையை கூறி உதவிக்கு கூப்பிட்டார்,..

சின்னதம்பி மரக்காயரின் மனைவி பாத்திமாபீவி அவரை தடுத்தார்....

"நான் நேற்று முன்தினம் இரவு பயங்கர கனவு கண்டேன். அதில் உமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அறிகுறி காட்டுகிறது...

எனவே கொடிமரம் வெட்ட நீங்கள் செல்ல வேண்டாம"| என்று கூறினாள்...

ஆனால் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை...

மனைவி உடனே அழுதாள், "நமது குடும்பம் உம்மை நம்பித்தான் உள்ளது. தயவு செய்து செல்ல வேண்டாம்" என்று தடுத்து கூறியும் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை...

.

விதி யாரை விட்டது. அவர் ஆறுமுகம் ஆசாரி குழுவினருடன் கிளம்பி களக்காட்டு மலைக்கு சென்றார்...

ஆறுமுகம் ஆசாரி உட்பட 21 பேர் திருச்செந்தூரி இருந்தே 21 மாட்டு வண்டிகளில் வந்து இருந்தார்கள்...

அந்த வண்டிகள் அணிவகுத்து களக்காடு மலையை நோக்கி சென்றது...

ஆனால் அவர்களுக்கு தேவையான கொடிமரம் கிடைக்கவில்லை...

தேடி ஓடிப் பார்த்தார்கள். பக்கத்தில் எந்த இடத்திலும் சரியான மரம் கிடைக்கவில்லை...

எனவே காக்காச்சி மலை என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையான பொதிகை மலை உச்சிக்கு சென்றனர். அங்கு அற்புதமான நல்ல உயரமான சந்தனமரம் ஒன்று இருந்தது...

"ஆகா இந்த மரம் தான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏற்ற கொடிமரம்" என்றார்

ஆறுமுக ஆசாரி...

அவர், சின்னதம்பி மரக்காயரிடம் இம்மரத்தை பற்றி மைபோட்டு பார்க்கும்படி

கேட்க, ரம்மியமான வாசனையுடன் இருக்கும் அந்த அற்புத மரத்தை குறித்து மை போட்டு பார்க்கிறார் மாந்திரிகரான சின்ன தம்பி மரக்காயர்...

அப்போது அந்த மரத்தில் அடி மரத்தில் சுடலைமாடனும், மேல் முனையில் சங்கடகாரனும் உள்பட 21 தேவதைகள் இருந்தது...

அந்த 21 தேவதைகளையும் விரட்டி விட்டு கொடி மரத்தினை வெட்ட வேண்டும். எனவே அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர்...

முதலில் மந்திரம் மூலம் தேவதைகளை விரட்ட மை போட்டார் மரக்காயர்...

மற்றவர்களை கோடாரி கொண்டு வெட்ட சொன்னார். கோடாரி மூலம் வெட்டப்பட்ட மரம் கோடாரியை திருப்பி விட்டது...

உடனே அந்த கோடாரி மற்றவர்களின் கழுத்தில் பட்டது...

அலறியபடி 20 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் மரணம் அடைந்தனர்.ஆறுமுக ஆசாரி அதிர்ச்சி அடைந்தார்...

ஐயோ நான் என்ன செய்வேன் என்று மந்திரவாதி சின்னதம்பி மரக்காயரிடம் சென்ற போது அவரும் ரத்தம் கக்கி இறந்து இருந்தார்...

அடுத்த வினாடி ஆறுமுக ஆசாரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை...

இதற்கிடையில் 21 மாட தேவதைகளும் மரத்தை விட்டு கீழே இறங்கி ஆறுமுக ஆசாரியை விரட்டியது...

உயிருக்கு பயந்த அவர் காக்காச்சி மலையை விட்டு ஓடினார். அடுத்து பொதிகை மலைக்கு

வந்தார்...

அந்த இடத்தை விட்டு கீழே இறங்கி ஓட ஆரம்பித்தார்...

இறுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சொரிமுத்து அய்யனார் கோவிலில் வந்து

அய்யனார் காலை பற்றிக் கொண்டு காப்பாற்ற கூறி கத்தினார்...

சொரிமுத்து அய்யனார் 21 மாடதேவதைகளையும் அழைத்து சமாதானம் செய்தார்.

'முருகன்.. எனது சகோதரன் தான்.. அவன் கோவிலுக்கு தானே கொடிமரம் செல்கிறது. பிறகு ஏன் தடுக்கிறீர்கள்' என்று கூறினார்...

பின் 21 மாட தேவதைகளையும் அந்த சந்தன மரத்தை வெட்டி திருச்செந்தூரில கொண்டு சேர்க்க உத்தரவிட்டார்...

அதன்படி 21 மாட தேவதைகளும் அந்த சந்தன மரத்தை வெட்டினார்கள்...

பின் 21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டினர். அந்த சந்தன மரத்தை அப்படியே தூக்கி வைத்து திருச்செந்தூர் நோக்கி கொண்டு சென்றார்கள். அந்த சந்தன மரமே தற்போது திருச்செந்தூரிலக் கொடி மரமாக வைக்கப்பட்டுள்ளது...

இப்போதும் மாசி திருவிழா நடைபெறும் போது ஆடு வெட்டி சுடலை மாடனுக்கும்,சங்கடகரகாரனுக்கும் படைத்து விட்டுத்தான் தேர் ஒட வேண்டிய வேலைகளை செய்வார்கள்...

மாசி திருவிழா தேர் ஓடும் போது அதிலேயும் சங்கடகரகாரன் தேர் மேல் ஏறி 'சரி போகலாம்"...

என்று கூறியவுடனேதான் தேர் நகரும்....

திருச்செந்தூர் கொடிமரத்தின் காவலுக்கு மாயாண்டி சுடலை மாடன் வந்த கதை

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

திருநெல்வேலி மாவட்டம் || ஊர்காடு ஜமீன் || மாயாண்டி சுடலை மாடன் || காவல் வந்த கதை

திருநெல்வேலி மாவட்டம் || ஊர்காடு ஜமீன் || மாயாண்டி சுடலை மாடன் || காவல் வந்த கதை

மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவிலின் பொன் பொருளை மீட்டெடுத்த பொற்படியான் காவல் வந்து நின்ற கதை

மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவிலின் பொன் பொருளை மீட்டெடுத்த பொற்படியான் காவல் வந்து நின்ற கதை

அஞ்சு கோட்டை || அய்யனாருக்கு || காவல் நிக்க || சந்தன கருப்பன் || வந்த கதை || முழு பகுதி

அஞ்சு கோட்டை || அய்யனாருக்கு || காவல் நிக்க || சந்தன கருப்பன் || வந்த கதை || முழு பகுதி

திருச்செந்தூர் முருகப்பெருமான் பெருமை | அடியார் இடைஞ்சல் களைவோன் | Tamil God | So So Mee Sundaram |

திருச்செந்தூர் முருகப்பெருமான் பெருமை | அடியார் இடைஞ்சல் களைவோன் | Tamil God | So So Mee Sundaram |

அகோரிகள் ரகசியம் 🌌🔱💀 | ஆதியந்தம் | பைரவர் | சிவம் | Agori Ragasiyam in Tamil

அகோரிகள் ரகசியம் 🌌🔱💀 | ஆதியந்தம் | பைரவர் | சிவம் | Agori Ragasiyam in Tamil

தமிழ் பேரரசன் இராவணன் கதை | Ravanan Story | The Boss Story | Tamil

தமிழ் பேரரசன் இராவணன் கதை | Ravanan Story | The Boss Story | Tamil

'கருணா'க்களின் துரோகம் மறக்கக்கூடாது | தமிழ் நாட்டில் நடந்த துரோகம் | பாடம் கற்போம்...

'கருணா'க்களின் துரோகம் மறக்கக்கூடாது | தமிழ் நாட்டில் நடந்த துரோகம் | பாடம் கற்போம்...

Sudalaimadan Kathai Villupaatu | சுடலை மாடன் கதை வில்லுப்பாட்டு | M.S. Rajalakshmi

Sudalaimadan Kathai Villupaatu | சுடலை மாடன் கதை வில்லுப்பாட்டு | M.S. Rajalakshmi

Trichy Rettamalai ONDI KARUPPU Story || திருச்சி ரெட்டமலை ஒண்டிக்கருப்பன் கதை

Trichy Rettamalai ONDI KARUPPU Story || திருச்சி ரெட்டமலை ஒண்டிக்கருப்பன் கதை

சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 01

சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 01

விருதுநகர் மாவட்டம் || வைரவநாங்கூர் || பொன் வைரவன் சுவாமி கோவில் || உருவான கதை

விருதுநகர் மாவட்டம் || வைரவநாங்கூர் || பொன் வைரவன் சுவாமி கோவில் || உருவான கதை

திருச்செந்தூர் முருகன் கோயிலின் 157 அடி மேற்கு கோபுரம் ஏன் மூடப்பட்டது? Tiruchendur Temple Mystery

திருச்செந்தூர் முருகன் கோயிலின் 157 அடி மேற்கு கோபுரம் ஏன் மூடப்பட்டது? Tiruchendur Temple Mystery

சுடலை மாடன் கதை ( புகழ்பெற்ற வில்லுப்பாட்டு) 1 million views....

சுடலை மாடன் கதை ( புகழ்பெற்ற வில்லுப்பாட்டு) 1 million views....

மாரநாடு கருப்பசாமி வரலாறு | How did Lord Karuppasamy Horse die? | Ramanad Palace & Karuppasamy link

மாரநாடு கருப்பசாமி வரலாறு | How did Lord Karuppasamy Horse die? | Ramanad Palace & Karuppasamy link

மஞ்சமலையாண்டி கதை || Story of Manjamalaiyandi

மஞ்சமலையாண்டி கதை || Story of Manjamalaiyandi

கருணைக்கு முருகன் - இதுவரை கேட்டிராத தகவல்களுடன் - Karunaikku Murugan Best Devotional Tamil Speech

கருணைக்கு முருகன் - இதுவரை கேட்டிராத தகவல்களுடன் - Karunaikku Murugan Best Devotional Tamil Speech

அகத்தியர் வரலாறு | Agathiyar History in Tamil

அகத்தியர் வரலாறு | Agathiyar History in Tamil

திறக்கப்படாத கருவறைக்குள்...? | @channelartindia | ஆச்சரியங்கள் நிறைந்த ஆலயம்

திறக்கப்படாத கருவறைக்குள்...? | @channelartindia | ஆச்சரியங்கள் நிறைந்த ஆலயம்

மிரளவைக்கும் கருப்பசாமி வரலாறு | Karuppusamy history in tamil | Karuppaswamy | Ayyappa | Sabarimala

மிரளவைக்கும் கருப்பசாமி வரலாறு | Karuppusamy history in tamil | Karuppaswamy | Ayyappa | Sabarimala

தேரிக்குடியிருப்பு || கற்குவேல் ஐயனார் கோவில் || உருவான கதை || பகுதி 01

தேரிக்குடியிருப்பு || கற்குவேல் ஐயனார் கோவில் || உருவான கதை || பகுதி 01

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]