Father's Day Tamil Song by Singer Ramu |
Автор: Swara Music USA
Загружено: 2021-06-19
Просмотров: 634
அப்பா அப்பா வணக்கம்
நீரின்றி அமையாது எதுவும்
அப்பா அப்பா வணக்கம்
நீரின்றி அமையாது எதுவும்
வயிற்றில் சுமந்த தாய் போலே
சுமக்கும் வாய்ப்பு வாய்க்கலையே
ஆனாலும் குறைவாக
மதிப்பதில்லையே
லட்சக்கணக்கில் உயிரினங்கள்
அவற்றில் எதில் தந்தை உண்டு
மனித இனம் மட்டுந்தானே
தகப்பன் உடையது
ஓர் அணுவை விதைத்துவிட்டால்
முடிந்ததா கடமை?
பேறுகால வலிக்கு ஈடாய்
உழைக்க முடியுமா?
அதற்குத்தானா உழைத்துத் தேய்கிறாய்?
அப்பன் அன்பு வேறு விதந்தான்
கடமை மட்டும் தாய்க்குக் கொடுத்து
உரிமை மட்டும் கொண்டாடும்
உதவாக்கரை உறவா தந்தை என்பது?
பிள்ளைகட்கு மட்டுமின்றி
பெற்றெடுத்த தாய்க்கும் எல்லாம்
பிரித்தளித்துப் பேணுவதில்
பெருமை கொள்பவன்
தந்தை மகற்காற்றும் நன்றி
அவையத்து முந்தி இருப்பச்
செய்தல்தான் சொல்லுகின்றார் எங்கள் பாட்டன்
நடை பழகையிலே
கை பிடிக்கக் கொடுத்தாய்
அதுவேதான் வாழ்க்கைப் பெரு நடை போகையிலும்
தன்னைவிட மேலான வாழ்க்கை
தம் மக்கள் வாழ வேண்டுமென்றா தேய்ந்தாய்?
திருவிழாவில் வேடிக்கை
தோளில் தூக்கிக் காட்டினாய்
அப்படியே உலகத்தையும் உயர்த்திக் காட்டினாய்
எப்படி இருக்க வேண்டும் என்றும்
எப்படி இருக்கக் கூடாதென்றும்
இரண்டுக்குமே எடுத்துக்காட்டாய் அப்பாக்கள் உண்டு
எப்படி இருக்க வேண்டும் என்று
சொல்லிக்கொடுக்கும் தந்தை உண்டு
வாழ்ந்து காட்டும் தந்தைதானே தலைவன் ஆகிறான்
அப்பா என்றால்
வெறும் கடுமை மட்டுமா?
கல்லுக்குள் ஈரமாக அன்பும் கசியும்
வருங்காலத் தந்தைக்கு நிறைய
பெரிதான மாற்றங்கள் வரலாம்
தாய்மார்கள் எல்லோரும்
தந்தை போல உழைக்கும் போது
தந்தையர்கள் தாயைப் போல மாறவும் வேண்டும்
எவ்வளவு உயரமாக வளர்ந்தாலுமே
எப்போதும் நிமிர்ந்து பார்க்கும் உயரமே அப்பா
உயரங்கள் அடைந்தாலுமே
நிமிர்ந்து பார்க்கும் இடத்திலே நிற்பார்
Song credits. :
Lyrics.... Bharathiraja Ramachandrabose
Singer.. Ramu
Flute... Srinivas
Violin... Sandilya Pisapati
Music.. Praveen Immadi
Mixed and mastered by
Chiru D'Souza at Studio Raaga.
Concept , copyrights : Swara Music & Swara Media.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: