பிரபஞ்ச ஈர்ப்பு விதியின் முக்கியமான இரண்டு விசயங்கள்| 2 important things in Law of attraction
Автор: Vaanga Pesalam
Загружено: 2021-07-22
Просмотров: 1836
Support the channel:
✔️ Instamojo: https://www.instamojo.com/@nambikkaik...
✔️ PayPal: http://paypal.me/tamilmotivations
✔️ Youtube(Monthly): / @vaangapesalam
பிரபஞ்சத்தின் இரண்டு பெரிய மாற்றங்கள் | 2 big changes of universe|Law of attraction|ஈர்ப்பு விதி
பிரபஞ்ச ஈர்ப்பு விதியின் முக்கியமான இரண்டு விசயங்கள்
பிரபஞ்ச ஈர்ப்பு விதியின் முக்கியமான அடுத்த கட்டம்
#NambikkaiKannan
ஒவ்வொரு நொடியிலும் இவ்வுலகம் மாறுகிறது. நம்மளை சுற்றி இருக்கிறவங்க மாறி கொண்டிருக்கிறார்கள்.
நாமும் மாறிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு எண்ணங்கள் வருகிறது. அனைத்தும் மாறிக் கொண்டிருக்கும் இவ்வுலகில், பிரபஞ்ச ஈர்ப்பு விதி மட்டும் விதிவிலக்கா. அதுவும் மாறிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் பொருந்தும் பிரபஞ்ச ஈர்ப்பு விதி என்பது எதுவும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு பிரபஞ்ச ஈர்ப்பு விதி பொருந்தும்.
பிரபஞ்ச ஈர்ப்பு விதியில் பல வகை உண்டு. அது என்னவென்று பார்ப்பதற்கு முன்னாடி பல வித மனிதர்களை பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம்.
வாழ்க்கையில் இரண்டு வித மனிதர்கள் இருக்கிறார்கள்.
நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், வீடு, கார் வாங்கனும், புகழோடு வாழனும் என்ற நோக்கத்துடன் வாழ்பவர்கள் முதல் வகை.
மன நிம்மதி தான் முக்கியம் என்ற நோக்கத்துடன் வாழ்பவர்கள் இரண்டாம் வகை.
ஒரு வகையில் இருப்பவர்கள் வாழ்க்கையில் வேறு ஒரு கட்டத்தில் இன்னொரு வகைக்கு மாறுவது சாத்தியம்.
அதாவது, பணமே முக்கியம் என்ற நோக்கம் கொண்டவர்கள், மன நிம்மதி தான் முக்கியம் என்று மாறுவது சாத்தியம்.
மன நிம்மதி தான் முக்கியம் என்ற நோக்கம் கொண்டவர்கள், பணமே முக்கியம் என்று மாறுவதும் சாத்தியம்.
இதில் எந்த வகை சரியானது என்ற அர்த்தமற்ற கேள்வி. ஏனென்றால், எது சரி, எது தவறு என்பது மனிதர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. பிரபஞ்சத்தை இயக்கும் சக்திக்கு மட்டுமே தெரியும்.
இப்ப, பிரபஞ்ச ஈர்ப்பு விதிக்கு வருவோம்.
பிரபஞ்ச ஈர்ப்பு விதியின் முதல் வகை உங்களுக்கு தெரியும்.
நமக்கு என்ன வேண்டுமோ, அதை முழு மனதுடன் உணர்வூப்பூர்வமாக கேட்டால், பிரபஞ்சம் நிச்சயம் கொடுக்கும். ஆனால், நமக்கு என்ன வேண்டும் என்பது நமக்கு தெளிவாக தெரியுமா? நிறைய நேரங்களில் தெரிவது இல்லை.
நிறைய பேர் எதை நோக்கி போறோங்காளோ, அது நோக்கி நாமும் போக தொடங்கிடுவோம்.
”வீடு வாங்குனா தான் வெற்றினு சொல்றாங்க. வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்கும்னு சொல்றாங்க. அதனால், எனக்கு வீடு வேண்டும்னு பிரபஞ்சம் கிட்டே கேட்கிறேன்.”னு ஒருத்தர் சொல்றார்.
“என்னை ஒருத்தன் அவமானப்படுத்தி விட்டான். அவன் முன்னாடி வாழ்ந்து காட்டனும். அதனால் எனக்கு கார் வேண்டும்னு பிரபஞ்சம் கிட்டே கேட்கிறேன்.” நு இன்னொருவர் சொல்றார்.
இப்படி ஒருவருக்கு என்ன வேண்டும் என்பதை பிற மனிதர்கள் தான் நிர்ணயம் செய்கிறார்கள்.
இப்படி இருக்கிறது நமக்கு சரிபட்டு வராது. எனக்கு என்ன வேண்டும் என்பது சக மனிதர்களுக்கு எப்படி தெரியும்?
பிரபஞ்சத்தை இயக்கும் சக்திக்கு மட்டும் தானே தெரியும்.
இன்னொன்று என்னவென்றால், ”எப்ப பார்த்தாலும் பிரபஞ்சம் கிட்டே எதையாவுது கேட்பதுக்கு எனக்கு ரொம்ப வெட்கமா இருக்கு. பிரபஞ்சம் என்ன என்னோட வேலைக்காரனா?” அப்படினு சிலருக்கு தோனும்.
இந்த மனநிலை கொண்டவர்கள் பிரபஞ்ச ஈர்ப்பு விதியின் இரண்டாம் வகையை சேர்ந்தவர்கள். அவங்க மன நிம்மதியே முக்கியம் என்ற நோக்கம் கொண்டவர்கள். அவங்க பிரபஞ்சம் கிட்ட எதையும் கேட்பது இல்லை. பிரபஞ்சம் கிட்ட முழுமையாக சரணடைந்து விடுவார்கள். ”என் வாழ்க்கை எப்படி இருக்கனும் என்பது பிரபஞ்சத்திற்கு மட்டுமே தெரியும்.” என்ற நம்பிக்கை கொண்டர்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்னாடி, நான் முதல் வகையில் இருந்தேன். இப்ப நான் இரண்டாம் வகையில் இருக்கிறேன்.
நாளை நான் எந்த வகையில் இருப்பேன் என்பது எனக்கு தெரியாது. என்னால் எப்படி அதை தீர்மானிக்க முடியும். பரந்து விரிந்த பிரபஞ்சத்தில், உலகம் என்ற சின்ன புள்ளியில் இருக்கின்ற, எதுவும் தெரியாத ஒரு முட்டாள் மனிதன் நான்.
என்னால் எதையுமே தீர்மானிக்க முடியாது. அனைத்தையும் பிரபஞ்சமே தீர்மானிக்கும்.
நான் இரண்டாம் வகையில் இருக்கிறேன். நீங்களும் இங்க வந்திடுங்க. நிம்மதியா இருக்கலாம் அப்படினு நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், நான் இரண்டாம் வகையில் தற்காலிகமாக இருக்கிறனா, இல்லை நிரந்திரமா இருக்கிறனா அப்படின்றது எனக்கே தெரியாது.
வாழ்க்கையில் எதுவுமே நிலையில்லை. ஆனால், இந்த நிலையற்ற தன்மையிலும் ஒரு சுவாரசியம் உண்டு அப்படின்றதை புரிஞ்சிகிட்டா வாழ்க்கை பாரமா இருக்காது. இனிமையா இருக்கும்.
இப்ப கருத்தை பதிவு பண்ற நேரம்.
நீங்க பிரபஞ்ச ஈர்ப்பு விதியின் எந்த வகையில் இருக்கிறீங்க - பணமா, மன நிம்மதியா?
Subscribe to our youtube channel, https://goo.gl/C0eF87
Follow us on:
Telegram channel - https://t.me/nambikkaikannan
Twitter - / nambikkaikannan
Instagram - / nambikkai_kannan
Facebook - / tamilmotivationalvideos
Website - https://tamilmotivations.com
மேலும் பல பயனுள்ள வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் காணத் தவறாதீர்கள்.
There are lots of useful videos in below links. Please watch them.
Motivational videos - https://goo.gl/Vn3qGz
How to become rich - https://goo.gl/mEErxy
Tamil cooking videos - https://goo.gl/njOE8t
Marriage motivations - https://goo.gl/5PqhbQ
Parenting videos(Must watch for parents) - https://goo.gl/XHxw09
How to reduce stress - https://goo.gl/Zd9Luo
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: