மிகப்பெரிய காடை குஞ்சு பொரிப்பகம் முட்டை முதல் குஞ்சு வரை / நீங்களும் வைக்கலாம் காடை முட்டை பண்ணை ??
Автор: Agri world - Vivasaya Ulagam விவசாய உலகம்
Загружено: 2020-09-08
Просмотров: 92326
காடை மற்றும் குஞ்சுகள் தேவைக்கு :
Mr : ஜெயக்குமார் +91 90477 22205
அபூர்வா காடை பண்ணை
17. புரவிபாளையம் , பொள்ளாச்சி ,
கோவை மாவட்டம்
காடை பற்றிய தகவல்கள் பதிவு அடங்கிய கட்டுரை :
1 ) மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் காடையை வளர்க்கலாம்.
2 )குறைந்த முதலீட்டில் தொடங்கலாம்.
காடைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகம்.
3)காடைகளை 5 முதல் 6 வாரங்களில் விற்பனை செய்யலாம்.
4)மிகக் குறைந்த அளவு தீவனமே போதுமானது பெரிய வளர்ந்த காடைக்கு 25 கிராம் தீவனம் தினமும் தேவைப்படும்
5)காடை இறைச்சியில் அதிக அளவு புரதமும் 22% குறைந்த அளவு கொழுப்பும் 5 % இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாகும்.
6)ஊட்ட சத்து நிறைந்த முட்டை காடை முட்டை
1) ஆழ்கூள முறை காடை வளர்ப்பு :
இம்முறையில் ஒரு சதுர அடியில் 6 காடைகள் வரை வளர்க்கலாம். காடைகள் முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்துப் பின் கூண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம். இதனால் வளரும் பருவத்தில் அதிகம் அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தி வீணாகி குறைந்த எடைகொண்டதாக உருவாவதை தடுக்கலாம்.
2) கூண்டு முறை காடை வளர்ப்பு :
கூண்டின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டு கம்பிவலை 1.5 க்கு 1.5 செ.மீ. உள்ளதாக இருக்க வேண்டும்.
(i) கூண்டுகளை 4 முதல் 5 அடுக்குகளாக அமைக்கலாம். ஒவ்வொரு கூண்டுக்கும் கீழே தகடுகள் பொருத்தி கழிவுகளை தினமும் அப்புறப்படுத்தலாம்.
ஜப்பானியக் காடை இறைச்சி :
சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடை எடையில் சுமார் 65 முதல் 70 சதவிகிதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடை உள்ள காடையைச் சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கின்றது. காடை இறைச்சியில் அதிகப் புரதமும் (20.5 சதவிகிதம்) குறைந்த அளவு கொழுப்பும் (5.8 சதவிகிதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாய் இருக்கின்றது
காடை இனங்கள் :
நியூசிலாந்து காடை
பாப் வெள்ளைக் காடை
சைனாக் காடை
மடகாஸ்கர் காடை
கலிபோர்னியா காடை
நியூகினியா காடை
ஜப்பானிய காடை
காடையின் இனப்பெருக்க காலம் :
காடைகள் 7 வார வயதில் முட்டையிட ஆரம்பித்து, 8வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 விழுக்காடு நிலையை அடையும். பொதுவாக காடைகள் மாலை நேரத்திலேயே முட்டைகளை இடும். கோழிக்குஞ்சுப் பொரிப்பகத்தை சரியானபடி மாற்றம் செய்தால் அதிக காடை முட்டைகளை அடை வைக்கலாம். அடைவதைத 18வது நாள் காடைக்குஞ்சுகள் வெளிவரும். 500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடைக்குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்
முட்டையும் நேரடி விற்பனை செய்யலாம் ..
காடை குஞ்சு பராமரிப்பு :
காடைக்குஞ்சுகள் பொரித்தவுடன் அளவில் மிகச் சிறியவையாக 8 முதல் 10 கிராம் வரை எடையுள்ளதாகத்தான் இருக்கும். இதனால் கோழிக் குஞ்சுகளுக்குப் புரூடர் வெப்பம் அதிகம் தேவைப்படும். போதுமான வெப்பம் மின்விளக்கு மூலம் கிடைக்காவிட்டால் அவை கூட்டமாக ஒன்றன் மீது ஒன்று ஏறி நெருக்கி மூச்சுத் திணறி இறப்பு ஏற்படும். வேகமான குளிர் காற்று வீசும் போதும் சன்னல் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், பக்கவாட்டில் தொங்க விடப்பட்டுள்ள மறைப்பு விலகி விட்டாலும், மின்சாரத் தடையேற்படும் போதும் இவ்வாறு நேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு இதனால் அதிக இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவே brooding சரியான முறையில் கொடுக்க வேண்டும்
நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள்
தொப்புள் அழற்சி
ஈகோலி நோய்
காடைக்கழிச்சல் மற்றும் காளான் நோய்கள்
நுரையீரல் அழற்சி
பூசண நச்சு.
மேலும் மேரெக்ஸ் வாத நோய், இராணிக்கெட் கழிச்சல் நோய் போன்ற வைரஸ் நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்களும், காக்சிடியோசிஸ் எனப்படும் இரத்தக் கழிச்சல் நோயும் காடைகளைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது ஆனால் பெரும்பாலும் காடைக்கு நோய்கள் தாக்கம் மற்ற பறவைகளை காட்டிலும் மிகவும் குறைவு
இருப்பினும் கோழிகளை விடக் காடைகள் இந்நோய்களை எதிர்க்கும் சக்தி அதிகம் கொண்டவையாக இருப்பதனால், இவ்வகை நோய்களுக்கு எதிராகத்தடுப்பு முறைகள் ஏதும் எடுக்கவேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை.
எனவே குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம், குளிர் காற்று வீசாமல் இளம் பருவத்தில் பாதுகாப்பு, முறையான கிருமி நீக்கம் எப்பொழுதும் தூய்மையான குடிநீர், தரமான கலப்புத் தீவனம் அளித்தல் போன்றவற்றைக வகையாகக் கையாண்டால் காடைகளில் ஏற்படும் இறப்பு விகிதத்தைப் பெருமளவு குறைத்து நோயின்றி அவைகளைப் பாதுகாத்து விற்பனை செய்து லாபம் ஈட்டலாம் ..
#காடைவளர்ப்பு #ஜப்பானியகாடைவளர்ப்பு
#காடைமுட்டை #காடைகுஞ்சு
#காடைபண்ணை #காடைபண்ணைதமிழ்நாடு #கோவைகாடைபண்ணை
#kaadaifarms #kovaikaadaipannai
#kaadaivalarpu #kaadaimuttai #kaadaivalarpuintamil #kaadaiintamil #kaadaipannaitamilnadu
இதுவரை கட்டுரை படித்த அனைவருக்கும் நன்றி என்றும் உங்களுடன்
விவசாய உலகம் இனியன்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: